தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ இளம் வயதிலே 'கிராமி' உறுப்பினர்; சென்னை இளைஞரின் சாதனை

 இளம் வயதிலே 'கிராமி' உறுப்பினர்; சென்னை இளைஞரின் சாதனை

 இளம் வயதிலே 'கிராமி' உறுப்பினர்; சென்னை இளைஞரின் சாதனை

3


ADDED : ஜூலை 24, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 01:54 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையை சேர்ந்த, 22 வயது இசைக்கலைஞர் அங்கித் குப்தா, சர்வதேச அளவில் கலைகளுக்காக செயல்படும், 'கிராமி' அமைப்பின் உறுப்பினராக தேர்வாகி, சாதனை புரிந்துள்ளார்.

இது குறித்து, அவர் அளித்த பேட்டி: சிறு வயது முதலே இசை கற்று வருகிறேன். சுயாதீன இசை அமைத்து வருகிறேன். சில படைப்புகள் வெளிவந்துள்ளன. சர்வதேச அளவிலான, 'ரெக்கார்டிங் அகாடமி'யில் ஓட்டளிக்கும் உறுப்பினராவது, ஒரு நம்ப முடியாத கவுரவம். இதை நான் அடைவேன் என, கற்பனை கூட செய்து பார்க்க வில்லை.

சர்வதேச அளவில், கலைகளுக்கான 'கிராமி' அமைப்பின் உறுப்பினர், ரெக்கார்டிங் அகாடமியின் ஓட்டளிக்கும் உறுப்பினர் என்பது, என் இலக்கு அல்ல. இது ஒரு மாபெரும் லட்சியத்தை நோக்கிய தொடக்கம் மட்டுமே.

வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு, தொடர்ந்து வழிகாட்டுவதோடு, சர்வதேச போட்டி தன்மை வாய்ந்த இசைத் துறையில் இந்திய, சர்வதேச கலைஞர்களின் கூட்டுப் படைப்புகள் வாயிலாக, தமிழ்இசையை உலக அரங்கில் உயர்த்த வேண்டும்.பெரிய கலைஞர்கள் மட்டுமே, இங்கு கவனிக்கப்படுகின்றனர். என் போல் திறமை மிகுந்த பல கலைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us