தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ பிளாட்டுகள் ஆன சரத்குமார் கட்டிய காமராஜர் மணிமண்டபம்

 பிளாட்டுகள் ஆன சரத்குமார் கட்டிய காமராஜர் மணிமண்டபம்

 பிளாட்டுகள் ஆன சரத்குமார் கட்டிய காமராஜர் மணிமண்டபம்


ADDED : ஜூலை 25, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மையிட்டான் பட்டியில் நடிகர் சரத்குமார் கட்டி 2019ல் திறக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம் தற்போது இடிக்கப்பட்டு பிளாட்டுகளாக மாறி வருகிறது.

விருதுநகரில் ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்படும்.

2007ல் அவருக்காக விருதுநகர் அருகேயுள்ள மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் மணிமண்டபம் கட்ட நடிகர் சரத்குமார் அடிக்கல் நாட்டினார். அதே நேரம் தனது சமத்துவ மக்கள் கட்சி அறிவிப்பு விழாவும் நடத்தினார்.

2019ல் ரூ.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மணிமண்டபம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் முன்னாள் முதல்வர் பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அப்போதைய பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை உட்பட பலர் பங்கேற்றனர். தற்போது காமராஜர் மணிமண்டபம் இடிக்கப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்படுகிறது. 2024ல் சரத்குமார் தனது கட்சியான ச.ம.க.,வை பா.ஜ.,வில் இணைத்தார். அப்போதே அக்கட்சியினர் பலர் மாற்றுக்கட்சிக்கு போய்விட்டனர்.

இந்த மணிமண்டபம் கட்டும் போது துணையிருந்த பல நிர்வாகிகள் தற்போது காமராஜர் மணிமண்டபம் இடிக்கப்பட்டது குறித்து கடும் வேதனை அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us