/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
150 பேரன், பேத்திகளுடன் பாட்டிக்கு 100வது 'பர்த்டே'
/
150 பேரன், பேத்திகளுடன் பாட்டிக்கு 100வது 'பர்த்டே'
150 பேரன், பேத்திகளுடன் பாட்டிக்கு 100வது 'பர்த்டே'
150 பேரன், பேத்திகளுடன் பாட்டிக்கு 100வது 'பர்த்டே'
ADDED : அக் 27, 2025 12:32 AM

சென்னிமலை: ஐந்து தலைமுறை கண்ட பாட்டி, 150 பேரன், பேத்திகளுடன் தன் 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே வெள்ளோட்டம் பரப்பு ஆட்டுக்காரன்புதுாரைச் சேர்ந்தவர் சம்பூர்ணம். இவருக்கு நேற்று 100வது பிறந்த நாள். இவரது கணவர் மாரப்பகவுண்டர், 35 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன், இரண்டு மகள். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
இவர்கள் மூலம் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் , பேத்தி, எள்ளுப்பேரன், பேத்திகள் என, குடும்ப உறுப்பினர்கள், 150 பேர் உள்ளனர். இவர்கள் சம்பூர்ணத்தின் பிறந்த நாளான நேற்று பங்கேற்றனர். அனைவரும் ஆடிப்பாடி, பாட்டியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
சம்பூர்ணத்தின் பேரன் விதுன் செங்கண்ணன் கூறுகையில், ''இவர் என் தந்தையின் அம்மா. குடும்ப உறவுகளுடன் அவரது, 100வது பிறந்த நாளை கொண்டாடியது மனநிறைவை அளித்தது. உணவு கட்டுப்பாடு, சரியான துாக்கமே பாட்டியை, 100 வயது வரை வாழ வைத்துள்ளது,'' என்றார்.

