/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பா.ஜ., கட்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய கின்னஸ் சாதனை சிறுவன்
/
பா.ஜ., கட்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய கின்னஸ் சாதனை சிறுவன்
பா.ஜ., கட்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய கின்னஸ் சாதனை சிறுவன்
பா.ஜ., கட்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய கின்னஸ் சாதனை சிறுவன்
UPDATED : ஏப் 05, 2024 10:33 AM
ADDED : ஏப் 05, 2024 01:04 AM

மேட்டுப்பாளையம்:கின்னஸ் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற, இரண்டு வயது சிறுவன், தான் பெற்ற பரிசுத்தொகையினை, பா.ஜ.,க்கு, மத்திய இணை அமைச்சர் முருகனிடம்,நன்கொடையாக வழங்கினார்.
கோவை கணபதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், ராஜலட்சுமி தம்பதி. இவர்களின் குழந்தை சாய் சித்தார்த் இரண்டு வயது. பிறந்தநாள் முதல், மிகவும் சுறுசுறுப்பாக இந்த சிறுவன் இருந்து வருகிறான். மணிகண்டன் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வருகிறார்.
இவரது அறையில் உள்ள மேப் மற்றும் புத்தகங்களுடனே சிறுவன் சாய் சித்தார்த் விளையாடி வருகிறார். இந்த வயதில், உலக நாடுகளின் தேசிய கொடிகளை காண்பித்தால், அதற்குரிய நாடுகளின் பெயரை சரியாக தெரிவித்து வருகிறார். இந்திய வரைபடத்தை வைத்து, மாநிலங்களையும் சரியாக அடையாளம் காட்டுகிறார்.
உலக வரை படத்தில், கண்டங்கள் பெயரை சரியாக காண்பித்ததின் பேரில், கின்னஸ் சாதனை புத்தகத்தில், இந்த இரண்டு வயது சாய் சித்தார்த் சிறுவன் இடம் பெற்றுள்ளார். 21.52 வினாடிகளில், இந்தியாவில் உள்ள, 28 மாநிலங்களையும், 11 வினாடிகளில் உலகில் உள்ள அனைத்து கண்டங்களையும், 8.95 வினாடிகளில் உலகின் ஏழு அதிசயங்களை கண்டறிந்தும், 195 நாடுகளின் கொடிகளை மிக குறுகிய நொடிகளில் சொல்லி, உலக சாதனைகளை படைத்துள்ளார். இச்சிறுவன் கின்னஸ், அமெரிக்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஹார்வார்ட் பல்கலைக்கழக பாராட்டு உள்பட பத்துக்கு மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
தனக்கு கிடைத்த விருதுகளுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் முருகன் முகாம் அலுவலகத்திற்கு, தனது பெற்றோர், உறவினருடன் சிறுவன் சாய் சித்தார்த் வந்தார். அமைச்சர் முருகனுக்கு நெற்றியில் விபூதியை பூசிய பின், தனக்கு கிடைத்த பரிசு தொகையான ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக, தமிழ்நாடு பா.ஜ., கட்சிக்கு காசோலையாக, மத்திய இணை அமைச்சர் முருகனிடம் சிறுவன் சாய் மற்றும் பெற்றோர் வழங்கினர். அப்போது கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா இருந்தார்,
பொள்ளாச்சி, ஏப். 5-
தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான, ஆண்டு இறுதி தேர்வில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைப்பட்ட நாட்களில் மாணவர்களை, பள்ளிக்கு வரவழைப்பதா அல்லது விடுமுறை அளிப்பதா என்ற குழப்பத்தில் தலைமையாசிரியர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த 2ம் தேதி, ஆண்டு இறுதி தேர்வு துவங்கியது. வரும், 12ம் தேதி தேர்வு முடிந்து, கோடை விடுமுறை துவங்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ரம்ஜான் பண்டிகை, தெலுங்கு மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், இரு தேர்வுகள், வேறு தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும், 10ல் நடத்த இருந்த அறிவியல் பாடத் தேர்வு, 22ம் தேதிக்கும்; 12ல் நடத்த இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.
இதனால், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை, 24ம் தேதி முதல் துவங்குமென உறுதியாகியுள்ளது.
அதேநேரம், தேர்வுக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட நாட்களில், மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதா அல்லது விடுமுறை அளிப்பதா என்ற குழப்பத்தில் பள்ளித் தலைமையாசிரியர்கள் திணறி வருகின்றனர்.
அரசு முடிவு எடுக்கணும்
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஏற்கனவே, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தவிர, 12ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்கவுள்ளது. அப்பணியிலும் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.
இதனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். சிறப்பு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பர். மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தாலும், அவர்களை கண்காணிக்க முடியாது.
விடுமுறை குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் கைவிரித்து விட்டனர். இதனால், செய்வதறியாது திணறி வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

