தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/'புள்ளிங்கோ' மாணவர்களுக்கு பள்ளியிலேயே முடி திருத்தம்

'புள்ளிங்கோ' மாணவர்களுக்கு பள்ளியிலேயே முடி திருத்தம்

'புள்ளிங்கோ' மாணவர்களுக்கு பள்ளியிலேயே முடி திருத்தம்


ADDED : ஜூலை 16, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: 'புள்ளிங்கோ' ஸ்டைல் மாணவர்களுக்கு, பள்ளியில் வைத்தே முடி திருத்தம் செய்யப்பட்டது.

கடலுார் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் சிலர், புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து பள்ளிக்கு வந்தனர்.

அவர்களிடம், நேர்த்தியான முறையில் முடி வெட்டி வரும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள், குறிப்பிட்ட மாணவர்களுக்கு, பள்ளியிலேயே வைத்து முடி வெட்ட திட்டமிட்டனர்.

தொடர்ந்து, நெடுஞ்சாலை ரோந்து சப் - இன்ஸ்பெக்டர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஒத்துழைப்புடன், முடித்திருத்தும் தொழிலாளர்களை, நேற்று காலை பள்ளிக்கு வரவழைத்து, வகுப்பறையிலேயே மாணவர்களின் முடியை வெட்டி, திருத்தம் செய்தனர். பள்ளி ஆசிரியர்களின் இந்த செயல், அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us