sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

"பாலாஜி' இதயம் பெற்றார் பாகிஸ்தான் "ரியாஸ்' : மதங்களை கடந்த மனித நேய "ஆபரேஷன்'

/

"பாலாஜி' இதயம் பெற்றார் பாகிஸ்தான் "ரியாஸ்' : மதங்களை கடந்த மனித நேய "ஆபரேஷன்'

"பாலாஜி' இதயம் பெற்றார் பாகிஸ்தான் "ரியாஸ்' : மதங்களை கடந்த மனித நேய "ஆபரேஷன்'

"பாலாஜி' இதயம் பெற்றார் பாகிஸ்தான் "ரியாஸ்' : மதங்களை கடந்த மனித நேய "ஆபரேஷன்'


ADDED : ஜூலை 14, 2011 11:28 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இந்தியாவை சேர்ந்த இந்து தானமாக கொடுத்த இதயத்தை, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபருக்கு, சென்னையை சேர்ந்த டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ரியாஸ் முகமது, 53. இவர், துபாயில் தங்கி ஜவுளி வர்த்தகம் செய்து வருகிறார். இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர், அங்கு 'ஒபன் ஹார்ட்' சர்ஜரி செய்துகொண்டார். ஆனால், அது பலனளிக்கவில்லை. பல இடங்களுக்கு சென்று சிகிச்சைப்பெற்றும் அவரது இதயநோய் பாதிப்பு நீங்கவில்லை. இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே இதற்கு தீர்வு என டாக்டர்கள் தெரிவித்தனர். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கியமான இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனைகள் குறித்து விவரம் சேகரித்தார். அதன் அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக, சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு, ரியாஸ் முகமது வந்தார். அவரிடம், மருத்துவமனையின் டாக்டர்கள் ஆரம்பகட்ட சோதனைகள் மேற்கொண்டனர். பின்னர் இதய மாற்று சிகிச்சைக்காக 23ம் தேதி அட்மிட் செய்யப்பட்டார்.

இதனிடையே, விபத்தில் பலத்தகாயம் அடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட, திருவண்ணாமலையை சேர்ந்த பாலாஜி, 33, என்பவர் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் இருந்த பாலாஜியின் உடலில் இருந்து இதயத்தை பிரித்தெடுத்து, முகப்பேர் பிராண்டியர் லைன் மருத்துவமனையில் உள்ள முகமது ரியாசுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதயத்தை அங்கிருந்து முகப்பேர் கொண்டுவருவதற்கு, போக்குவரத்து போலீசாரின் உதவி கேட்கப்பட்டது. சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார். அதை தொடர்ந்து, பிராண்டியர் லைன் மருத்துவமனையை சேர்ந்த பிரசாந்த் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், கடந்த 10ம் தேதி அங்கு சென்றனர். நள்ளிரவு 1.47 மணிக்கு பாலாஜியின் உடலில் இருந்து இதயத்தை ஆபரேஷன் மூலம் பிரித்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் முகப்பேர் கொண்டு வந்தனர். நெரிசல் இல்லாமல் போக்குவரத்தை போலீசார் சீரமைத்துக் கொடுத்தனர். சரியாக 34.008 கி.மீ., தூரத்தை 24 நிமிடங்களில் கடந்து, நள்ளிரவு 2.11 மணிக்கு அந்த ஆம்புலன்ஸ், முகப்பேர் பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையை வந்தடைந்தது. அதன்பிறகு ஐந்து மணிநேரம் ஆபரேஷன் மூலம், இந்து பாலாஜியின் இதயம், பாகிஸ்தான் முஸ்லிம் ரியாஸ் முகமது உடலில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக துடிக்கத் துவங்கியது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இதயம் தானம் கொடுத்தவர் இந்து, அதை பெற்றவர் முஸ்லிம், அதை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பிரசாந்த் என்பவர் கிறிஸ்தவர். பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் கே.எம்.செரியன் கூறும்போது, 'ரியாஸ் முகமதுக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்று இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவரது உடல் நிலையும், இதயத் துடிப்பும் சீராகவுள்ளன. அடுத்த 10 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார்சூ என்றார்.






      Dinamalar
      Follow us