/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
‛103' ஐ கரம் பிடித்த ‛50' : வைரலாகும் புகைப்படம்
/
‛103' ஐ கரம் பிடித்த ‛50' : வைரலாகும் புகைப்படம்
UPDATED : ஜன 30, 2024 12:47 AM
ADDED : ஜன 29, 2024 11:58 PM

போபால்: மத்திய பிரதேசத்தில் 103 வயது சுதந்திர போராட்ட தியாகியை 50 வயது பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இட்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹபீப் நாசர் ,103 சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி இருவரும் இறந்துவிட்டனர். தனக்கு உதவிட துணை இல்லாமல் தனிமையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஹபீ்ப் நாசருக்கு பணிவிடை செய்ய வந்த பைரேஸ் ஜஹான்.50 என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்த பைரேஸ் ஜஹான் கூறுகையில், எனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டார். என் கடைசி வாழ்நாளை ஹபீப் நாசருடன் கழிக்க விரும்புகிறேன் என்றார். 103 வயது முதியவரை 50 வயது பெண் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.