தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/பஸ்சில் கிடந்த ரூ.30 ஆயிரத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

பஸ்சில் கிடந்த ரூ.30 ஆயிரத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

பஸ்சில் கிடந்த ரூ.30 ஆயிரத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

1


ADDED : அக் 31, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : அக் 31, 2026 04:05 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மாநகர பேருந்தில் கிடந்த 30 ஆயிரம் ரூபாயை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் பாராட்டி கவுரவித்தனர்.

சென்னை, புழுதிவாக்கம், தியாகி பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 52; சி.ஏ.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்தில் துணை மேலாளர். நேற்று முன்தினம் காலை 8:52 மணி, மடிப்பாக்கம் குமரன் திரையரங்கம் நிறுத்தத்தில் இருந்து, தடம் எண் 14எம் மாநகர பேருந்தில் ஏறி பரங்கிமலை ரயில் நிலையம் நோக்கி சென்றார்.

வானுவம்பேட்டை அருகே சென்றபோது, கீழே கிடந்த பணத்தைப் பார்த்த பிரபாகரன், மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பின், அன்றிரவு 9:50 மணியளவில் காவல் நிலையம் சென்று பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் முன்னிலையில் எண்ணியபோது, அதில் 30 ஆயிரம் ரூபாய் இருந்தது. பிரபாகரனின் நேர்மையை பாராட்டி, மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சுரேந்திரன் அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us