தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் அதிர்ச்சி

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் அதிர்ச்சி

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் அதிர்ச்சி

1


ADDED : அக் 08, 2026 08:52 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : அக் 08, 2026 08:52 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழனி: பழனி அருகே, மானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில், விஷமிகள் மனிதக்கழிவை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, மானுார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 5ல் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.

அன்று காலை, மாணவர்களுக்கு உணவு சமைக்க வந்த பெண், அங்கு பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் குழாய் உடைக்கப்பட்டு இருப்பதை கவனித்தார். பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். நிர்வாகத்தினர், குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த போது, மனிதக்கழிவு கலக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தொட்டியில் இருந்த கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். பள்ளி விடுமுறை நாளில், விஷமிகள், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்துள்ளனர்.

இரு நாட்களுக்கு பின், நேற்று இவ்விவகாரம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவர, பள்ளியில் திரண்டனர். இதுபோன்ற விஷம செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us