தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/பாம்பன் துாக்கு பாலத்தில் அத்துமீறி அதிகாரிகளின் உறவினர்கள் 'செல்பி'

பாம்பன் துாக்கு பாலத்தில் அத்துமீறி அதிகாரிகளின் உறவினர்கள் 'செல்பி'

பாம்பன் துாக்கு பாலத்தில் அத்துமீறி அதிகாரிகளின் உறவினர்கள் 'செல்பி'

1


UPDATED : அக் 09, 2026 01:41 AM

ADDED : அக் 08, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 01:41 AM ADDED : அக் 08, 2026 07:52 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தில், உயர் அதிகாரிகளின் உறவினர்கள் அத்துமீறி நுழைந்து 'செல்பி' எடுத்தது சர்ச்சையாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் புதிய ரயில் பாலத்தின் நடுவில், 'லிப்ட்' முறையில் இயங்கும் துாக்கு பாலம் உள்ளது. இதனை, பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணியர் செல்பி எடுப்பர்.

நேற்று முன்தினம் ராமேஸ்வரத்திற்கு ரயில்வே அதிகாரி, உறவினர்கள் வந்தனர். அவர்கள், பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு வந்து, துாக்கு பாலத்தின் துாண் மேல் தளத்திற்கு சென்றனர்.

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஆபத்தான முறையில் நின்றபடி தங்கள் மொபைல்போனில் செல்பி எடுத்தனர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us