தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/வாக்காளர் பட்டியலில் பகத்சிங் படம்: வெடித்தது புதிய சர்ச்சை

வாக்காளர் பட்டியலில் பகத்சிங் படம்: வெடித்தது புதிய சர்ச்சை

வாக்காளர் பட்டியலில் பகத்சிங் படம்: வெடித்தது புதிய சர்ச்சை

3


UPDATED : அக் 12, 2026 07:54 AM

ADDED : அக் 12, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : அக் 12, 2026 07:54 AM ADDED : அக் 12, 2026 07:39 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், ஒரு வாக்காளரின் பெயருக்கு நேராக சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

லூதியானா கிழக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட 38வது வார்டில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 422வது வரிசை எண்ணில் உள்ள ஒரு வாக்காளரின் விவரத்திற்கு நேராக, விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங்கின் படம் அச்சிடப்பட்டு இருந்தது.

​இந்த குளறுபடியை காங்கிரஸ் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டினர். தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தியாகி பகத்சிங்கைக் கூட விட்டுவைக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் தீவிர முறைகேடுகள் நடக்கின்றன என, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்

​அதிகாரிகள் விளக்கம்:


சர்ச்சை வெடித்ததை அடுத்து லூதியானா மாவட்ட நிர்வாகம், இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேரிட்டிருக்கலாம் எனவும் ,இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த நபர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us