தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/வாகன ஓட்டி, போலீசை தாக்கிய அடாவடி பெண் கைது

வாகன ஓட்டி, போலீசை தாக்கிய அடாவடி பெண் கைது

வாகன ஓட்டி, போலீசை தாக்கிய அடாவடி பெண் கைது


UPDATED : அக் 13, 2026 12:54 AM

ADDED : அக் 13, 2026 12:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 12:54 AM ADDED : அக் 13, 2026 12:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம், சேனாபதிபாளையத்தை சேர்ந்தவர் மயில்வாகனம், 57. கோவை சூலுாரில் அயர்னிங் வேலை செய்து வருகிறார். நேற்று காலை டூவீலரில் சூலுார் நோக்கி சென்றபோது, பல்லடம் -- செட்டிபாளையம் ரோடு பிரிவு அருகே எதிரே வந்த வடுகபாளையத்தை சேர்ந்த கார்த்திகா, 26 என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதும் வகையில் வந்ததால் நிலை தடுமாறி மயில்வாகனம் கீழே விழுந்தார்.

டூவீலரில் இருந்து இறங்கிய கார்த்திகா, தான் அணிந்திருந்த செருப்பால் மயில்வாகனத்தை தாக்கியுள்ளார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் கார்த்திகா பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டார்.

ஸ்டேஷனில் பணியில் இருந்த போலீசாரிடம் கார்த்திகா தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதையடுத்து மகளிர் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ. கலையரசி வரவழைக்கப்பட்டார். அவரையும் ஒருமையில் பேசி தாக்கியதில் கலையரசிக்கு தலை, முகம், கண் பகுதியில் உள்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயன்ற காவலர் சுகன்யாவையும் தாக்கியுள்ளார். இதையடுத்து, கார்த்திகாவை போலீசார் கைது செய்தனர். கார்த்திகாவின் கணவர் கவுதம், காங்கயத்தில் ஓராண்டுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, நான்கு நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தவர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவத்தால் பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us