உள்ளடக்கத்திற்கு செல்ல

தனுஷ்கோடி - இலங்கை வரை நீந்தி கடந்த சென்னை சிறுவன்
தனுஷ்கோடி - இலங்கை வரை நீந்தி கடந்த சென்னை சிறுவன்
UPDATED : அக் 01, 2026 04:37 AM
ADDED : அக் 01, 2026 12:06 AM

அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியிலிருந்து இலங்கை வரை, 64 கி.மீ., துாரத்தை, 'ஆட்டிசம்' பாதித்த சிறுவன் இஷான், 13, நீந்தி சென்று வந்து சாதனை படைத்தார்.
சென்னையை சேர்ந்த சர்மிளா மகன் இஷான். ஆட்டிசம் பாதித்த இந்த சிறுவன், இரு ஆண்டுகளாக சென்னை, கோவளம் கடலோரத்தில் நீச்சல் பயிற்சி பெற்றுள்ளார். சவால் நிறைந்த தனுஷ்கோடி கடலில் நீந்தி கடக்க முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் குதித்து இஷான் நீந்த தொடங்கினார். இலங்கை தலைமன்னாருக்கு நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு சென்றார். அங்கிருந்து நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு நீந்த தொடங்கி நேற்று காலை, 11:50 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்தார். 64 கி.மீ., துாரத்தை, 18 மணி, 20 நிமிடத்தில் நீந்தி அவர் சாதனை படைத்தார்.
