தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ உலகின் மிக உயரமான உம்லிங் லா கணவாயை அடைந்த பாலக்காடு பெண்; 6,200 கி.மீ துாரம் பைக்கில் பயணித்து சாதனை

 உலகின் மிக உயரமான உம்லிங் லா கணவாயை அடைந்த பாலக்காடு பெண்; 6,200 கி.மீ துாரம் பைக்கில் பயணித்து சாதனை

 உலகின் மிக உயரமான உம்லிங் லா கணவாயை அடைந்த பாலக்காடு பெண்; 6,200 கி.மீ துாரம் பைக்கில் பயணித்து சாதனை


ADDED : செப் 30, 2026 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: உலகின் மிக உயரமான மோட்டார் வாகன பாதையான லடாக்கின் 'உம்லிங் லா' கணவாயை பைக்கில் வெற்றிகரமாக அடைந்து, பாலக்காட்டை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் பெருங்குளம் காரியோட்டு கிராமத்தை சேர்ந்த நாராயணசுவாமி - உஷா தம்பதியரின் மகள் ஹர்ஷா, 37. இவரது கணவர் சாய் கணேஷ். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து, 19,024 அடி உயரத்தில், கிழக்கு லடாக்கின் சாங்தாங் பகுதியில் இந்திய- - சீன எல்லை அருகே அமைந்துள்ள கடினமான பாதையை பைக்கில் கடந்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து, ஹர்ஷா கூறியதாவது: அமெரிக்காவில் வசித்த நான் சி.ஏ. படிப்பை முடிப்பதற்காக, கடந்த 2025 நவ., மாதம் சொந்த ஊருக்கு வந்தேன். சொந்தமாக பைக் வாங்கினேன். டிச. மாதம் டிரைவிங் லைசென்ஸ் பெற்றேன். லடாக்கிற்கு பைக் பயணம் செல்லப் போவதாகக் கூறியபோது குடும்பத்தினர் முதலில் தயங்கினாலும், அதன்பின் எனது விருப்பத்திற்கு முழு ஆதரவு அளித்தனர்.

இதற்காக திருச்சூரில் உள்ள 'டார்க் ஸ்கூல் ஆப் ஆட்டோமோட்டிவ்' பயிற்றுநர் ஆல்பினிடம் நீண்ட தூர மற்றும் கரடுமுரடான சாலைகளில் பயணிப்பதற்கான சிறப்பு பயிற்சி பெற்றேன். மேலும் 'கம்யூனிட்டி ரைடர்ஸ் பெடரேஷன்' அமைப்பை சேர்ந்த பாயிஸ் மற்றும் மஜீத்தீன் ஆகியோரின் வழிகாட்டுதலுடன், வாகமண், நெல்லியம்பதி போன்ற மலைப்பகுதிகளில் பயிற்சி பயணங்கள் மேற்கொண்டேன்.

ஆக. 5ம் தேதி, மூன்று பெண்கள் உட்பட 9 பேர் கொண்ட குழுவுடன், ஆலத்தூரிலிருந்து லடாக் நோக்கி பயணத்தை துவங்கினேன். கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வழியாக நாள் ஒன்றுக்கு 500 கி.மீ வரை பயணித்து, 6,200 கி.மீ தூரம் பைக்கில் பயணம் செய்தேன். ஆக. 15ம் தேதி வாகா எல்லையில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்திலும் எங்களது குழுவினர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, ஆக. 24 அன்று உலகின் மிக உயரமான 'உம்லிங் லா' கணவாயை சென்றடைந்தோம். அதன்பின் சவாலான பாங், கட்டா லூப்ஸ் மற்றும் அடல் சுரங்கப்பாதை வழியாக மணாலியை அடைந்து எங்களது பயணத்தை நிறைவு செய்தோம். எங்களது பைக்குகளை பார்சல் சர்வீஸ் வாயிலாக ஊருக்கு அனுப்பிவிட்டு, டில்லியிலிருந்து விமானத்தில் சொந்த ஊர் திரும்பினோம். இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us