தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ பாரம்பரிய அரிசி ரகங்களை மீட்டெடுக்கும் 'மண்வாசனை' மேனகா

 பாரம்பரிய அரிசி ரகங்களை மீட்டெடுக்கும் 'மண்வாசனை' மேனகா

 பாரம்பரிய அரிசி ரகங்களை மீட்டெடுக்கும் 'மண்வாசனை' மேனகா


UPDATED : ஆக 10, 2026 04:28 AM

ADDED : ஆக 09, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 04:28 AM ADDED : ஆக 09, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

--நமது நிருபர் -

பாரம்பரிய உணவுகள் மீது ஆர்வம் கொண்டவர் சென்னையை சேர்ந்த மேனகா. 'மண்வாசனை' எனும் நிறுவனம் வாயிலாக, பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை மீட்டெடுத்து, உணவுப்பொருட்கள் தயாரித்து, 15 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சமீபத்தில் நடந்த, 'நெல் திருவிழா'வில் மேனகா கூறியதாவது:

கடந்த, 2011ல் நெல் ஜெயராமன் ஐயாவையும், நம்மாழ்வார் ஐயாவையும் சந்தித்ததில், நம் மண்ணுக்கே உரிய பாரம்பரிய அரிசி வகைகள், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.

'மக்களுக்கு இதை எடுத்து சொல்லுங்க' என, நம்மாழ்வார் கூறியதால், நம் பாரம்பரிய அரிசி வகைகளை, மக்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில், மண்வாசனை நிறுவனத்தை தொடங்கி, ஒவ்வொரு ஊராக சென்று, பாரம்பரிய அரிசிகளை சேகரித்து, சென்னையில், 2014ல் பாரம்பரிய அரிசி திருவிழா நடத்தி, 50 வகையான பாரம்பரிய அரிசிகளை காட்சிப்படுத்தினேன்.

கொத்தமல்லி சம்பா, துளசி வாசம் சம்பா உட்பட பல ரகங்களை மக்கள் தெரிந்து கொண்டாலும், யாருமே அந்த அரிசி ரகங்களை வாங்கவில்லை. மறுபுறம், சிறுதானியம், பருப்புகள், செக்கு எண்ணெய் ஆகியவற்றை வாங்கினார்கள்.

பா ரம்பரிய அரிசியை சமைப்பது குறித்து அவர்களிடம் ஏராளமான சந்தேகங்கள் இருப்பதை அறிந்து, அரிசியாக கொடுப்பதை விட, மதிப்பு கூட்டி கொடுக்கலாம் என்ற யோசனை வந்தது.

அதன்பின் , மண்வாசனை பெயரில் நிறுவனத்தை உருவாக்கி, குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட முறுக்கு, அதிரசம், லட்டு உட்பட ஸ்நாக்ஸ் வகைகள், தோசை மாவு, புட்டு மாவு, சத்து மாவு தொடங்கி, கருப்புக்கவுனி அரிசியில் ஐஸ்க்ரீம் வரை, 78 வகையான உணவு பொருட்கள், தயாரித்து விற்கிறேன். இதுகுறித்து பயிற்சியும் அளிக்கிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற, 1,000க்கும் மேற்பட்டோரில், 225 பேர் தனியாக தொழில் தொடங்கிஉள்ளனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமும், பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானியங்கள் பற்றி எடுத்துக்கூறி வருகிறேன். ஆக., 23ல் பப்புவா நியூ கினியா செல்லவிருக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

தான் சேகரித்த, 100 பாரம்பரிய அரிசிகளை கொண்டு, 2022 அக்டோபர் மாதம், 1 மணி நேரத்தில், 214 உணவுகள் தயாரித்து, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்' மற்றும் 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' ஆகிய சாதனை புத்தகங்களில் மேனகா இடம்பிடித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us