UPDATED : ஜூன் 03, 2026 06:39 AM
ADDED : ஜூன் 02, 2026 11:05 PM
UPDATED : ஜூன் 03, 2026 06:39 AM ADDED : ஜூன் 02, 2026 11:05 PM

சென்னை: கொளத்துார் தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு, முதல்வர் விஜய் போன்ற தோற்றத்தை உடையவரை வைத்து நன்றி தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு தோற்கடித்தார்.
முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று முன்தினம் நன்றி தெரிவித்த நிலையில், கொளத்துாரில் வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு, விஜய் போன்ற தோற்றம் உடையவருக்கு முதல்வர் வேடமிட்டு, தொகுதி முழுதும் அழைத்துச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
திடீரென, விஜய் போன்ற தோற்றம் கொண்டவரை பார்த்ததும், நிஜமாகவே விஜய் என்று எண்ணி கூட்டம் கூடியது.
ஆனால், அவர் 'டம்மி' என்று தெரிந்த பின், ஆச்சர் யத்துடன் பார்த்து சென்றனர்.
