/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஸ்கூட்டருக்கு பதில் மொபட் திருட்டு: ஆசாமியின் 'கரிசனம்'
/
ஸ்கூட்டருக்கு பதில் மொபட் திருட்டு: ஆசாமியின் 'கரிசனம்'
ஸ்கூட்டருக்கு பதில் மொபட் திருட்டு: ஆசாமியின் 'கரிசனம்'
ஸ்கூட்டருக்கு பதில் மொபட் திருட்டு: ஆசாமியின் 'கரிசனம்'
ADDED : ஜன 22, 2025 06:26 AM

பல்லடம் : பல்லடம் அருகே, திருட்டு ஆசாமி ஒருவர், எக்ஸ்சேஞ்ச் ஆபரை போன்று, ஸ்கூட்டரை திருடி விட்டு, அதற்கு பதிலாக, பழைய மொபட்டை விட்டு சென்றது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, கே.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார், 33. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, ஜன., 12ம் தேதி அன்று, இவர், தனக்கு சொந்தமான ஸ்கூட்டரை (டிஎன்.39.டிபி.8235) வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த பார்த்தபோது, இவரது டூவீலர் மாயமானது. ஆனால், அதற்கு பதிலாக, பழைய மொபட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்து, பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.
டூவீலர் திருட்டில் ஈடுபட்ட ஆசாமி, நவீன வசதிகள் கொண்ட ஸ்கூட்டரை திருடி விட்டு, பழைய மொபட்டை, அதுவும் மாலை அணிவித்த நிலையில் விட்டு சென்றுள்ளார். இந்த பழைய மொபட் திருட்டு ஆசாமியுடைய வாகனமா அல்லது இதையும் வேறு எங்கிருந்தாவது திருடி எடுத்து வந்து இங்கு நிறுத்தி சென்றாரா என்று தெரியவில்லை.
ஷோரூம்களில் வழங்கப்படும் 'எக்ஸ்சேஞ்ச் ஆபர்' போன்று, பழைய வாகனத்தை நிறுத்தி விட்டு புதிய வாகனத்தை திருடி சென்றுள்ளதாக, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மொபட்டின் பதிவு எண் மற்றும் 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.