/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கிரஹலட்சுமி பணத்தில் ஆழ்துளை கிணறு: முதல்வருக்கு மாமியார், மருமகள் நன்றி
/
கிரஹலட்சுமி பணத்தில் ஆழ்துளை கிணறு: முதல்வருக்கு மாமியார், மருமகள் நன்றி
கிரஹலட்சுமி பணத்தில் ஆழ்துளை கிணறு: முதல்வருக்கு மாமியார், மருமகள் நன்றி
கிரஹலட்சுமி பணத்தில் ஆழ்துளை கிணறு: முதல்வருக்கு மாமியார், மருமகள் நன்றி
UPDATED : டிச 15, 2024 03:39 PM
ADDED : டிச 14, 2024 11:18 PM

கதக்: கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், தங்களுக்கு கிடைத்த உதவித்தொகையை பயன்படுத்தி, மாமியாரும், மருமகளும் ஆழ்துளை கிணறு அமைத்தனர்.
கர்நாடக காங்கிரஸ் அரசு, ஆட்சிக்கு வந்தவுடன், ஐந்து வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தியது. இவற்றில் கிரஹலட்சுமி திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த தொகையை பல பெண்கள், நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். ஒரு மூதாட்டி, கிரஹலட்சுமி திட்டத்தின் பணத்தை சேமித்து, தன் மருமகளுக்கு பேன்சி ஸ்டோர் வைத்துக் கொடுத்தார். மற்றொருவர் ஊருக்கு விருந்து கொடுத்தார். பெண்கள் பலரும் தங்கள் வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிஜ் என, பல்வேறு பொருட்களை வாங்கினர்.
ஒரு பெண், தன் மகனுக்கு பைக்கும், மற்றொரு பெண் தன் கணவர் பணிக்கு செல்ல உதவியாக ஸ்கூட்டரும் வாங்கிக் கொடுத்தனர். இன்னொரு பெண், மசாலா அரைக்கும் இயந்திரம் வாங்கி, சொந்த தொழில் துவக்கினர். கிரஹலட்சுமி திட்டத்தின் தொகையை, பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்துவதால், அரசும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
கதக், கஜேந்திரகடாவின் மாலதாரா ஓனி கிராமத்தில் வசிப்பவர் மாபுபி. இவரது மருமகள் ரோஷன்பேகம். இவர்களுக்கு கிரஹலட்சுமி திட்டத்தின் உதவித்தொகை கிடைக்கிறது. இந்த தொகையை சேமித்து வைத்து, தங்கள் நிலத்தில் ஆழ்துளைகிணறு அமைத்தனர். இதில் தண்ணீர் கிடைத்துள்ளது. ஆழ்துளைகிணறு அமைக்க 60,000 ரூபாய் செலவானது. கிரஹலட்சுமி திட்டத்தில் சேமித்த 44,000 ரூபாயை கொடுத்தனர். மீதித் தொகையை அவரது மகன் கொடுத்தார். விளைச்சலுக்கு தண்ணீர் கிடைத்தது.
மாபுபி கூறுகையில், ''முதல்வர் சித்தராமையா செயல்படுத்திய கிரஹலட்சுமி திட்டம், மிகவும் உதவியாக உள்ளது. அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,'' என்றார்.