/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தெரு நாய்கள் அல்ல.... சமூக நாய்கள்....
/
தெரு நாய்கள் அல்ல.... சமூக நாய்கள்....
ADDED : நவ 28, 2025 08:59 AM

திருப்புவனம்: தெரு நாய்கள் குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் சமூக நாய்கள் என குறிப்பிட்டு பதிலளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ரோட்டை ஒட்டி 50க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் சேகரமாகும் கழிவுகளை நிலத்தில் புதைக்க வேண்டும். ஆனால் இறைச்சிகடை கழிவுகளை ரோட்டிலேயே வீசிவிடுகின்றனர். இதை சாப்பிடுவதற்காக நகரில் 150க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வலம் வருகின்றன.
எனவே அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த டி.ஒய்.எப்.ஐ., யின் ஒன்றிய செயலாளர் முத்துராஜா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மனு அளித்து உள்ளார். ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர் அதற்கு 'சமூக நாய்களுக்கு' ஏ.ஆர்.வி., தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
தெருநாய்கள் குறித்த கேள்விக்கு 'சமூக நாய்கள்' என அதிகாரிகள் பதிலளித்துள்ளதால் இனி அவை 'சமூக நாய்கள்' என அழைக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

