/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
இறந்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் எழுந்த ஆச்சர்யம்
/
இறந்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் எழுந்த ஆச்சர்யம்
இறந்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் எழுந்த ஆச்சர்யம்
இறந்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் எழுந்த ஆச்சர்யம்
UPDATED : பிப் 14, 2024 07:31 AM
ADDED : பிப் 14, 2024 12:15 AM

பெர்ஹாம்பூர்: ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தின் பெர்ஹாம்பூரில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 1ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட, 52 வயது பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் பரிசோதித்ததில், மேல் சிகிச்சைக்காக அவரை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அவரது கணவரிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும், குடும்ப வறுமையின் காரணமாக அவர், தன் மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
சில நாட்களாக அப்பெண் கண் விழிக்காமல் இருப்பதை பார்த்த அவரது குடும்பத்தினர், அவர் இறந்து விட்டதாக கருதினர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் அருகேயுள்ள சுடுகாட்டிற்கு அவரது உடலை எடுத்துச் சென்று, இறுதி சடங்குகளை செய்தனர்.
அங்கு தகன மேடையில் அந்த பெண்ணின் உடலை வைப்பதற்கு சில வினாடிகளுக்கு முன், திடீரென அவர் விழித்து எழுந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

