/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
துாத்துக்குடியில் மணல் அரிப்பால் காணாமல் போகும் பனை மரங்கள்
/
துாத்துக்குடியில் மணல் அரிப்பால் காணாமல் போகும் பனை மரங்கள்
துாத்துக்குடியில் மணல் அரிப்பால் காணாமல் போகும் பனை மரங்கள்
துாத்துக்குடியில் மணல் அரிப்பால் காணாமல் போகும் பனை மரங்கள்
UPDATED : மார் 30, 2025 07:56 PM
ADDED : மார் 30, 2025 02:58 AM

துாத்துக்குடி: கடற்கரையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மணல் அரிப்பு காரணமாக, பனை மரங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மணல் அரிப்பு காரணமாக, பனைமரங்கள் சரிந்து விழுந்து கடலுக்குள் இழுத்துச் செல்லும் நிலை தொடர்கிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன் உள்ள கடற்கரையில், கடலின் சீற்றம் காரணமாக, 50 அடிக்கு கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள குலசேகரன்பட்டினம் கடற்கரையிலும், இரண்டு மாதமாக தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
கடற்கரையோரம் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்கள், கடல் அரிப்பால் சாய்ந்து விழுந்துள்ளன. அலையின் வேகம் காரணமாக கீழே விழும் பனை மரங்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. உடனடியாக கடல் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.