/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கீழே கிடந்த பர்சை ஒப்படைத்த மாணவர்களுக்கு மக்கள் பாராட்டு
/
கீழே கிடந்த பர்சை ஒப்படைத்த மாணவர்களுக்கு மக்கள் பாராட்டு
கீழே கிடந்த பர்சை ஒப்படைத்த மாணவர்களுக்கு மக்கள் பாராட்டு
கீழே கிடந்த பர்சை ஒப்படைத்த மாணவர்களுக்கு மக்கள் பாராட்டு
ADDED : நவ 05, 2025 12:34 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் கீழே கிடந்த பர்சை போலீசார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்த மாணவர்கள் கபிலேஷ், திருமுருகனை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
முதுகுளத்துார் அருகே மாரந்தையை சேர்ந்த பானுமதி பொருட்கள் வாங்குவதற்காக முதுகுளத்துார் வந்தார். இவரது கையில் வைத்திருந்தத பர்ஸ் தொலைந்தது. இதில் ரூ.3000 பணம், 4 கிராம் தங்க நகை, கொலுசு இருந்துள்ளது.
முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் கொண்டுலாவியை சேர்ந்த மாணவர்கள் கபிலேஷ், திருமுருகன் வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த போது கீழே கிடந்த பர்சை புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின் போலீசார் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துள்ளனர். பர்சை தொலைத்த பானுமதியிடம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் முன்னிலையில் மாணவர்கள் ஒப்படைத்தனர். உடன் போலீஸ்காரர் மலர்ராஜ் உட்பட பலர் இருந்தனர்.
கீழே கிடந்த பர்சை எடுத்து கொடுத்த மாணவர்கள் கபிலேஷ், திருமுருகனை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

