/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஆறு பேரை திருமணம் செய்த 'கல்யாண ராணி'யால் 'கிறுகிறு'
/
ஆறு பேரை திருமணம் செய்த 'கல்யாண ராணி'யால் 'கிறுகிறு'
ஆறு பேரை திருமணம் செய்த 'கல்யாண ராணி'யால் 'கிறுகிறு'
ஆறு பேரை திருமணம் செய்த 'கல்யாண ராணி'யால் 'கிறுகிறு'
ADDED : நவ 04, 2025 02:02 AM

கள்ளக்குறிச்சி:  ஆறு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய மனைவி மீது கலெக்டர் அலுவலகத்தில் கணவர் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையத்தை சேர்ந்த டிரைவர் சிவக்குமார், நேற்று இரு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
மதுரை மாவட்டம், கல்லுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுடன் 2019ல் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 2020ல் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.  இரு குழந்தைகள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், ஆந்திராவில் உள்ள பாட்டியை பார்க்க செல்வதாக கூறி, குழந்தை களுடன் சென்ற மனைவியை காணவில்லை. நான் ஆந்திரா சென்று குழந்தைகளை மீட்டு, சொந்த ஊர் வந்து, மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தேன்.
விசாரணையில், அவர் சொந்த விருப்பத்தில் சென்றதாக கூறியுள்ளார். என் மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று விசாரித்ததில், 2013ல் வெங்கடேசன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
பின், இருவரும் பிரிந்துள்ளனர். 2016ல் கோவையைச் சேர்ந்த சுரேஷ்குமாரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சுரேஷ்குமார் திடீரென இறந்துள்ளார்.
பின், 2017ல் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தற்போது மனைவியின் தாய் வளர்க்கி றார். தொடர்ந்து, செல்வராஜ் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளா ர்.
பின், 2019ல் மதுரை மாவட்டத்தை சேர்ந்த லிங்குசாமி என்பவரை காதல் திருமணம் செய்து, கர்ப்பமடைந்துள்ளார்.
கர்ப்பிணியாக இருந்த போது தான், இன்ஸ்டாகிராமில் என்னுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. என்னுடன் பழகுவதை அறிந்த லிங்குசாமி திட்டியதால் பிரச்னை ஏற்பட்ட நிலையில், கர்ப்பத்தை கலைத்துள்ளார். இந்நிலையில், லிங்குசாமியும் இறந்துள்ளார்.
தொடர்ந்து, மூரார்பாளையம் வந்த அவர், 'எனக்கு திருமணமாகவில்லை; இனி உங்களுடன் தான் இருப்பேன்' என, என்னிடம் கூறியதால், நம்பி நான் அவரை திரு மணம் செய்தேன்.
வீட்டிலிருந்து, 3 லட்சம் ரூபாய், மூன்றரை சவரன் நகைகளை எடுத்து சென்றுவிட்டார். தற்போது ஆம்பூரை சேர்ந்த மணிகண்டனை ஆறாவதாக திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.என் குழந்தைகளை பரா மரிக்க முடியாமல் சிரமப்படுகிறேன். மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மனுவை பெற்ற அதிகாரிகள், தலை சுற்றிப்போய், விசாரிக்க போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

