தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/வவ்வால்களுக்காக தீபாவளியில் பட்டாசு வெடிக்காத மக்கள்

வவ்வால்களுக்காக தீபாவளியில் பட்டாசு வெடிக்காத மக்கள்

வவ்வால்களுக்காக தீபாவளியில் பட்டாசு வெடிக்காத மக்கள்

1


UPDATED : நவ 06, 2026 07:15 PM

ADDED : நவ 05, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:15 PM ADDED : நவ 05, 2026 07:18 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, வவ்வால்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என, தீபாவளி பண்டிகையின்போது, அப்பகுதி மக்கள், பட்டாசுகளை வெடிக்காமல், தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பல்லேனஹள்ளி கிராமம் உள்ளது. இங்கு ஏரிக்கரையில் உள்ள முனியப்பன் கோவிலை சுற்றி, மிகவும் பழமையான புளிய மரம், ஆலமரம், நாவல், பலா, எட்டிமரம் ஆகியவை உள்ளன.

இந்த மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் உள்ளன. இவை, இரவு நேரங்களில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று இரை தேடி விட்டு, பின் அதிகாலையில் ஓய்விற்காக இந்த மரங்களை வந்தடைகின்றன. இந்த வவ்வால்கள், தங்கள் கிராமத்திற்கு பாதுகாப்பு என கருதும் அப்பகுதி மக்கள், அவைகளை பாதிக்கும் எந்தவித செயலையும் செய்வதில்லை. அக்கிராம மக்கள், வவ்வால்களை கடவுளாகவும், நோய் தீர்க்கும் பாலுாட்டிகளாவும் வணங்கி வருகின்றனர்.

அதனால், தீபாவளி பண்டிகையில் கூட, வெடிகளை வெடிக்காமல், அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வவ்வால்கள் தங்கியுள்ள பகுதியிலுள்ள முனியப்பன் கோவிலில் திருவிழாவின் போதும், வெடிகளை வெடிப்பதில்லை. கிராம மக்கள் அங்குள்ள தெய்வங்களோடு, இந்த வவ்வால்களையும் தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us