உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 05, 2026 05:14 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்துார் நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் மாரிமுத்து, 56, 'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்' என, தன் மேஜை மீது 'போர்டு' வைத்துள்ளார்.
விருதுநகரை சேர்ந்த இவர், சாத்துாரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பராமரிப்பு பிரிவில் இளநிலை பொறியாளராக பொறுப்பேற்றார். முன்னதாக, துாத்துக்குடியில் பணிபுரிந்தார். இவர் தன் மேஜை மீது, லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என, போர்டு வைத்துள்ளார்.
மாரிமுத்துவின் இந்த செயலுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது கோவில்பட்டி தொகுதியில் பறக்கும் படை அதிகாரியாக செயல்பட்ட இவர், அப்போது அ.தி.மு.க., அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு மீது, தேர்தல் விதிமீறல் வழக்கு பதிந்தார்.
