/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பெண்களின் பாதுகாப்பிற்கு வருகிறது 'பிங்க் ஆட்டோ'
/
பெண்களின் பாதுகாப்பிற்கு வருகிறது 'பிங்க் ஆட்டோ'
UPDATED : அக் 23, 2024 03:31 AM
ADDED : அக் 23, 2024 12:47 AM

சென்னை : சென்னையில் பெண் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன.
சமூக நலத்துறை கமிஷனர் லில்லி வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சென்னையில், 250 'இளஞ்சிவப்பு ஆட்டோ'க்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதாவது பெண்கள், குழந்தைகளின் பயண பாதுகாப்பிற்காக, பெண் ஓட்டுனர்களால் இயக்கப்பட உள்ள இந்த ஆட்டோக்களில், அவசர உதவிக்கான காவல் துறை உள்ளிட்ட துறைகளின் உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட, ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்படும்.
பெண்களின் சுயதொழிலை ஊக்கப்படுத்தவும், ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதில் பயன்பெற 10ம் வகுப்பு முடித்து, 25 முதல் 45 வயது வரையிலான, ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, 'சமூக நல அலுவலர், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை - 600 001' என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் பெற்று, அடுத்த மாதம் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.