தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ரூ.91 லட்சம் ஜி.எஸ்.டி., பாக்கி; நோட்டீசால் மூதாட்டி அதிர்ச்சி

ரூ.91 லட்சம் ஜி.எஸ்.டி., பாக்கி; நோட்டீசால் மூதாட்டி அதிர்ச்சி

ரூ.91 லட்சம் ஜி.எஸ்.டி., பாக்கி; நோட்டீசால் மூதாட்டி அதிர்ச்சி

3


ADDED : செப் 25, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:41 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பத்துார்: 'ஜி.எஸ்.டி., 91 லட்சம் ரூபாய் பாக்கி' என, நோட்டீஸ் வந்ததால், இட்லி விற்கும் மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார்.

திருப்பத்துார் மாவட்டம், துத்திப்பட்டுவைச் சேர்ந்தவர் வசந்தா, 60. கணவரை இழந்த இவர், அதே கிராமத்தில் இட்லி விற்று பிழைப்பு நடத்துகிறார். ஆம்பூரிலுள்ள இந்தியன் வங்கியில் வசந்தா, நேற்று பணம் எடுக்க சென்றபோது, அவரது கணக்கு முடக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

இந்நிலையில் அவருக்கு, சேலம் ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் இருந்து, ஒரு நோட்டீஸ் வந்தது. அதில், 'நீங்கள், 'ஷர்மிளா என்டர்பிரைசஸ்' நிறுவனம் நடத்தி, 91 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி., பாக்கி வைத்துள்ளீர்கள்; அதை, உடனே செலுத்த வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

வசந்தா, உமராபாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'என் பான், ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தி, ஜி.எஸ்.டி., மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து, முடக்கப்பட்ட என் வங்கி கணக்கை, மீட்டு தர வேண்டும்' என, தெரிவித்துள்ளார். போலீசார், விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us