sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

பள்ளி மாணவி மூளைச்சாவு: ஏழு பேருக்கு மறுவாழ்வு

/

பள்ளி மாணவி மூளைச்சாவு: ஏழு பேருக்கு மறுவாழ்வு

பள்ளி மாணவி மூளைச்சாவு: ஏழு பேருக்கு மறுவாழ்வு

பள்ளி மாணவி மூளைச்சாவு: ஏழு பேருக்கு மறுவாழ்வு


UPDATED : பிப் 26, 2026 10:07 AM

ADDED : பிப் 26, 2026 07:40 AM

Google News

UPDATED : பிப் 26, 2026 10:07 AM ADDED : பிப் 26, 2026 07:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 73வது வார்டு கவுன்சிலர் சந்தோஷ் - சுகன்யா தம்பதி மகள் வெண்பா. கடந்த, 23ம் தேதி தலைவலி, வாந்தியால் அவதியுற்ற மாணவி, திடீரென்று மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரிந்தது. மேல் சிகிச்சைக்காக,கே.எம்.சி.எச்.,ல் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த மாணவி, மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.பெற்றோர், குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் விதிமுறைகளின்படி, கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் தானமாக பெறப்பட்டன. கல்லீரல், ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கண்கள், எலும்பு, தோல் வேறு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. ஏழு பேர் மறுவாழ்வு பெற்றனர்.

வெண்பாவின் குடும்பத்திற்கு கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us