தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/வகுப்பறையில் ஹெச்.எம்.,மை தாக்கிய இடைநிலை ஆசிரியை

வகுப்பறையில் ஹெச்.எம்.,மை தாக்கிய இடைநிலை ஆசிரியை

வகுப்பறையில் ஹெச்.எம்.,மை தாக்கிய இடைநிலை ஆசிரியை

1


UPDATED : ஆக 03, 2026 09:25 AM

ADDED : ஆக 03, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 09:25 AM ADDED : ஆக 03, 2026 12:06 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை புவனா, 53, என்பவரை, ஆசிரியை கலைமதி, 51, என்பவர் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை புவனா. இதே பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக கலைமதி என்பவர் பணியாற்றுகிறார்.

கலைமதி முறையாக பணியாற்றவில் லை என, புவனா அளித்த புகாரால், வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தி யுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த கலைமதி, ஜூலை 30ல் வகுப்பறையில் வைத்து, மாணவர்கள் மத்தியில் புவனாவை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை, தன் மொபைல்போனில் மற்றொரு ஆசிரியை பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் கூறுகையில், ''தலைமை ஆசிரியை புவனா மீது, ஆசிரியை கலைமதி தாக்குதல் நடத்தியது குறித்து, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us