/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சினிமாவில் குதித்தார் பா.ஜ., மூத்த தலைவர்
/
சினிமாவில் குதித்தார் பா.ஜ., மூத்த தலைவர்
UPDATED : ஆக 04, 2025 06:52 AM
ADDED : ஆக 04, 2025 06:16 AM

சென்னை : பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, கந்தன்மலை என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவராக உள்ள எச்.ராஜா, ஆ டிட்டர் தொழில் செய்து வருகிறார். இவர், கந்தன்மலை என்ற திரைப்படத்தில், முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை, வீர முருகன் என்பவர் இயக்க உள்ளார். சிவபிரபாகரன் மற்றும் சந்திரமோகன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர்.
இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' நேற்று வெளியிடப்பட்டது. அதில், பெரிய முறுக்கு மீசையுடன், கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் எச்.ராஜா இருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, எச். ராஜாவை தொடர்பு கொண்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தனர்.
படத்தின் கதையை முழுமையாக கேட்டறிந்த ராஜா, கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.