/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மனைவியை கொன்று கால்வாயில் வீசிய கணவரை காட்டிக்கொடுத்த கல் மூக்குத்தி
/
மனைவியை கொன்று கால்வாயில் வீசிய கணவரை காட்டிக்கொடுத்த கல் மூக்குத்தி
மனைவியை கொன்று கால்வாயில் வீசிய கணவரை காட்டிக்கொடுத்த கல் மூக்குத்தி
மனைவியை கொன்று கால்வாயில் வீசிய கணவரை காட்டிக்கொடுத்த கல் மூக்குத்தி
UPDATED : ஏப் 12, 2025 06:19 AM
ADDED : ஏப் 12, 2025 01:08 AM

புதுடில்லி: மனைவியை கொன்று உடலை கால்வாயில் வீசிய டில்லி தொழிலதிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
டில்லியில் உள்ள கால்வாயில் சமீபத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
காயங்களுடன் போர்வையில் சுற்றப்பட்டு, கல் மற்றும் சிமென்ட் பலகையுடன் கட்டப்பட்டிருந்த அந்த உடல், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மூக்குத்தி
போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, இறந்த பெண் அணிந்திருந்த விலையுயர்ந்த கல் மூக்குத்தியை வைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. அந்த மூக்குத்தியை எடுத்துச் சென்று பல்வேறு நகைக் கடைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இறுதியில், தெற்கு டில்லி பகுதியில் உள்ள நகைக் கடையில், அந்த மூக்குத்தி வாங்கப்பட்டது தெரியவந்தது.
டில்லி - ஹரியானா எல்லையில் உள்ள குருகிராமில் வசிக்கும் அனில் குமார் என்பவர் அந்த மூக்குத்தியை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இறந்தவர் அனில் குமாரின் மனைவி சீமா சிங், 47, என்பதும் தெரியவந்தது.
ரியல் எஸ்டேட் அதிபரான அனில் குமாரை தொடர்பு கொண்டபோது, அவர் ஊரில் இல்லாததும், எந்தவித தகவல் தொடர்பு சாதனமும் இன்றி அவர் உத்தர பிரதேசம் பிருந்தாவனத்தில் தங்கிஇருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
விசாரணை
பின், அனில் குமாரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
'கடந்த ஒரு மாதமாக அனில்குமார் - சீமா சிங் தம்பதி மாயமாக உள்ளனர். அவ்வப்போது புதிய எண்களில் இருந்து அனில்குமார் பேசுவார்.
சீமா குறித்து கேட்டதற்கு 'அவர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். குணமடைந்ததும் பேசுவார்' என அனில்குமார் தெரிவித்தார்' என போலீசாரிடம் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, சீமாவின் உடற்கூராய்வு அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
அவரை அனில்குமார் கொலை செய்ததை அறிந்த போலீசார், பிருந்தாவனம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இறுதியில் அங்கு பதுங்கியிருந்த அனில்குமார் மற்றும் அவரின் பாதுகாவலர் சிவசங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குடும்பத் தகராறு காரணமாக சீமா கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், முழு விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

