/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சர்ச் பொங்கல் விழாவில் ரூ.81 ஆயிரத்திற்கு ஏலம் போன கரும்பு
/
சர்ச் பொங்கல் விழாவில் ரூ.81 ஆயிரத்திற்கு ஏலம் போன கரும்பு
சர்ச் பொங்கல் விழாவில் ரூ.81 ஆயிரத்திற்கு ஏலம் போன கரும்பு
சர்ச் பொங்கல் விழாவில் ரூ.81 ஆயிரத்திற்கு ஏலம் போன கரும்பு
ADDED : ஜன 20, 2026 02:30 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகேயுள்ள பாடத்தான்பட்டி புனித வனத்து அந்தோணியார் சர்ச் பொங்கல் விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்ட கரும்பு ரூ.81 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு, தை மாதம் 4ம் தேதி சர்ச் முன்பு சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, சிறப்பு திருப்பலி, சப்பரத்தில் புனித வனத்து அந்தோணியார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து கரும்பு தொட்டிலில் குழந்தைகளை வைத்து சர்ச்சை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு கரும்பு தொட்டிலுக்கு 5 கரும்பு பயன்படுத்தப்படும். நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள், ஒரு கரும்பை எடுத்து விட்டு மற்ற 4 கரும்புகளை சர்ச்சில் செலுத்துவர். இந்த கரும்பு ஏலம் விடப்படும். இதில் முதலாவதாக கரும்பு ஏலம் எடுப்பவர்கள் நினைத்த காரியம் நடக்கும். கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
முதல் கரும்பு ரூ.101க்கு என ஏலம் தொடங்கிய நிலையில் அதை கோவை அருண் என்பவர் ரூ. 81 ஆயிரத்திற்கும், 2வது கரும்பை ஆரோக்கியதாஸ் ரூ.15 ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு முதல் கரும்பு ரூ. 51 ஆயிரத்திற்கும், அதற்கு முந்தைய ஆண்டு, ரூ.1.75 லட்சத்திற்கும் ஏலம் போனது.

