மழையில் இருந்து காத்த குடை: குமாரை பாதுகாக்கவில்லை
மழையில் இருந்து காத்த குடை: குமாரை பாதுகாக்கவில்லை
UPDATED : ஜூன் 21, 2026 07:58 AM
ADDED : ஜூன் 20, 2026 05:02 PM

குடை சரி செய்வோரில் பலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர்; பாரம்பரிய தொழில் என்பதால், ஒண்டிப்புதுாரில் இன்னும் இத்தொழிலை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார் குமார். 60 வயதை கடந்த அவரிடம் பேசினோம்.
''15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கருப்பு குடைகள்தான் விற்பனைக்கு வரும். இன்று வண்ண, வண்ண குடைகள் வருகின்றன. கம்பிகள் அடங்கிய தொகுப்பின்மீது போர்த்தப்பட்ட துணி கிழிந்துபோதல், கம்பிகள் உடைதல் போன்ற பராமரிப்புக்கு வேலையே குறைந்துவிட்டது.
இணையத்தில் ஆர்டர் செய்தால் குறைந்த விலையில் வீட்டுக்கு வருகிறது குடை. 'யூஸ் அண்டு த்ரோ' ஆக குடையை பயன்படுத்தத் துவங்கி விட்டனர். அப்புறம் நமக்கு எப்படி வேலை வரும்?
ஆனாலும் மழை காலத்தில் ஓரளவு வருவாய் வரும். மற்ற சமயத்தில் ஒரு நாள் கிடைக்கும்; ஒரு நாள் கிடைக்காது; வாழ்ந்தாக வேண்டுமே,'' என, புலம்பியபடி நடக்க ஆரம்பித்தார் குமார்.
