UPDATED : ஏப் 17, 2025 06:55 AM
ADDED : ஏப் 17, 2025 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் வினோத்குமார், 23. இவர் ஏப்.12 ல் கேரளா மூணாறுக்கு டூவீலரில் சென்றபோது சறுக்கி விழுந்ததில் தலையில் காயமைடைந்தார்.
தேனி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அதே நாளில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏப்.16 அதிகாலை 12:30 மணிக்கு மூளைச் சாவு நிலையை அடைந்தார். தந்தை முருகன் சம்மதத்தின் பேரில் அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டன. ஒரு சிறுநீரகம், இரு கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
கல்லீரல் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.