தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த டிப் டாப் ஆசாமி உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த டிப் டாப் ஆசாமி உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த டிப் டாப் ஆசாமி உளுந்துார்பேட்டையில் பரபரப்பு


UPDATED : செப் 10, 2026 07:44 PM

ADDED : செப் 10, 2026 06:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2026 07:44 PM ADDED : செப் 10, 2026 06:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுக்க கூலிங் கிளாசுடன் டிப் டாப் ஆசாமி கையில் தட்டேந்தி பிச்சையெடுத்ததால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்சலீம் ஷேக், 45; நொனையவாடி கிராமத்தைச் சேர்ந்த இவரது மனைவியான தாஹிரோன், 40; குடும்பத்தில் உள்ள நிலத்திற்கு கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்கக் கோரி கடந்த மார்ச் மாதம் எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்த வி.ஏ.ஓ.,விடம் மனு அளித்துள்ளார்.

கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ., 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அப்துல்சலீம் ஷேக், உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டார்.

மேலும் அவர், வாழ்க தமிழ், ஒழியட்டும் ஊழல், பூர்வீக சொத்தில் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்டார். என்னிடம் பணம் இல்லை, அதனால் மக்கள் மத்தியில் பிச்சை எடுக்கிறேன் என பதாகை வைத்திருந்தார்.

வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ஜீன்ஸ், பேண்ட் சட்டை அணிந்து கூலிங் கிளாசுடன் டிப் டாப்பாக வலம் வந்து பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us