தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ திறக்காத அரசு பஸ் கதவு: பரிதவித்த பயணிகள்

 திறக்காத அரசு பஸ் கதவு: பரிதவித்த பயணிகள்

 திறக்காத அரசு பஸ் கதவு: பரிதவித்த பயணிகள்


ADDED : செப் 11, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அரசு டவுன் பஸ் கதவு திறக்காததால் பயணிகள் அரை மணி நேரம் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அரசு பஸ் டெப்போ மூலம் திருப்புத்துார்- சிங்கம்புணரிக்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று இரவு 7:00 மணிக்கு சிங்கம்புணரி வந்தது.

யூனியன் ஸ்டாப் அருகில் பயணிகள் இறங்குவதற்காக டிரைவர் தானியங்கி கதவுகளை திறக்க முயற்சித்தார். ஆனால் திறக்கவில்லை. கடுமையாக போராடியும் கதவு திறக்காததால் பயணிகளுடன் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் கொண்டு வரப்பட்டது.

அங்கும் டிரைவர், கண்டக்டர் முயற்சித்துப் பார்த்தும் கதவு திறக்கவில்லை. இதனால் அரை மணி நேரம் பயணிகள் பஸ்சிற்குள் தவித்தனர்.

வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய சிலர் ஜன்னல் வழியாக இறங்கிச் சென்றனர். அரை மணி நேரத்திற்கு பிறகு பக்கத்து ஊரிலிருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டு கதவு திறக்கப்பட்டபின் பஸ் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது. மாணவர்கள் உள்ளிட்டோர் படிகளில் பயணம் செய்வதை தவிர்க்க அனைத்து அரசு பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப் பட்டுள்ளது. இவை முறையாக பராமரிக்கப்படாமல், தரமாக இல்லாத நிலையில் பல நேரங்களில் கதவுகளை திறக்கவும் முடிவதில்லை. சில நேரங்களில் பயணிகளையும் இக்கதவுகள் காயப்படுத்தி விடுகிறது. எனவே முறையாக பராமரிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us