/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
அரசு பள்ளியில் தடுப்பு இல்லாமல் கட்டிய கழிப்பறை!
/
அரசு பள்ளியில் தடுப்பு இல்லாமல் கட்டிய கழிப்பறை!
ADDED : அக் 07, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேம்பாட்டு மானியத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. நேற்று, ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ஸ்டாலின், இக்கட்டடத்தை திறந்து வைத்தார்.
புதிதாக திறக்கப்பட்ட கழிப்பறையில் தடுப்புகள் இன்றி, வரிசையாக அமைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கட்டமைப்பு சர்ச்சையும், கலகலப்பையும் உண்டாக்கியுள்ளது.