/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கோவில் கதவில் கருணாநிதி 'போட்டோ ' வைத்து அஞ்சலி
/
கோவில் கதவில் கருணாநிதி 'போட்டோ ' வைத்து அஞ்சலி
UPDATED : ஆக 08, 2025 06:50 AM
ADDED : ஆக 08, 2025 02:55 AM

தஞ்சாவூர்:சுவாமிமலையில், கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி செலுத்திய தி.மு.க.,வினர் மீது, பா.ஜ., வினர் புகார் அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று கா லை, கோவில் முகப்பில் உள்ள கேட்டில், கருணாநிதி போட்டோவை வைத்து, தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.
தகவலறிந்த பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோவில் துணை ஆணையர் உமாதேவிக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கருத்துகள் பரவின.
இதையறிந்த தி.மு.க.,வினர், சி ல மணி நேரத்தில், கோவில் பணியாளர்கள் முன்னிலையில், கருணாநிதி போட்டோவை அகற்றினர். இது தொடர்பாக, பா.ஜ.,வினர் சுவாமிமலை போலீசில் புகார் அளித்துள்ளனர்.