தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் மாநில அளவில் முதலிடம்

 நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் மாநில அளவில் முதலிடம்

 நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் மாநில அளவில் முதலிடம்

7


ADDED : ஜூலை 18, 2026 09:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 09:03 AM

7


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: நீட் தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு மறு தேர்வு கடந்த ஜூன் 21ம் தேதி நடந்தது. இந்த தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் நள்ளிரவு தேசிய தேர்வு மு கமை வெளியிட்டது.

அதன்படி, நீட் நுழைவுத் தேர்வில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12வது இடமும் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இவர், விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை டாக்டர் அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பொன்னேரியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பிளஸ் 2 படித்த வேங்கடபதி வேலாயுதம், நீட் நுழைவு தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களையும், கட் ஆப் அடிப்படையில் 99.99915 சதவீத மதிப்பெண்களையும் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us