/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சக ஆண் பயணிக்கு முத்தமிட்ட நபர்: வக்காலத்து வாங்கிய மனைவி
/
சக ஆண் பயணிக்கு முத்தமிட்ட நபர்: வக்காலத்து வாங்கிய மனைவி
சக ஆண் பயணிக்கு முத்தமிட்ட நபர்: வக்காலத்து வாங்கிய மனைவி
சக ஆண் பயணிக்கு முத்தமிட்ட நபர்: வக்காலத்து வாங்கிய மனைவி
UPDATED : மார் 07, 2025 04:20 AM
ADDED : மார் 07, 2025 01:18 AM

புதுடில்லி: சமீபத்தில், புனே - ஹாதியா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிர்மல் மிஷ்ரா என்ற நபர் பயணம் செய்தார். ரயிலில் கீழ் பெர்த்தில் அவர் படுத்திருந்த நிலையில், அருகில் இருந்த சக பயணியான சத்தீஸ்கரைச் சேர்ந்த 33 வயது நபர், மிஷ்ராவுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.
பல இடங்களில் அவரை தொட்டு சீண்டிய நபர், இறுதியில் முத்தம் தந்துள்ளார். திடுக்கிட்டு கண் விழித்த மிஷ்ரா, இது குறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த நபர், 'எனக்கு பிடித்திருந்தது; முத்தம் தந்தேன்' என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சக பயணியர் முன்னிலையில் இருவரும் தாக்கிக் கொண்டனர்.
முத்தம் கொடுத்த நபரின் மனைவியோ, 'இந்த விஷயத்தை ஏன் பெரிதாக்குகிறீர்கள்' என கேள்வி எழுப்பியதுடன், தன் கணவரை பாதுகாக்கவும் முயன்றார். இந்த சம்பவத்தை ரயிலில் இருந்த பயணி ஒருவர் தன் மொபைல் போனில் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய மிஷ்ரா, 'ரயிலில் ஆண் பயணியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது; பெண்களுக்கு மட்டும் எப்படி பாதுகாப்பு இருக்கும் என தெரியவில்லை. தவறு செய்த நபரை தண்டிக்க யாருமே தயாராக இல்லை.
பாதிக்கப்பட்டது ஆண் என்பதாலேயே அனைவரும் மவுனமாக இருக்கின்றனர். இதுவே, பெண்ணுக்கு நேர்ந்திருந்தால், ஏன் அந்த நபரின் மனைவிக்கே நேர்ந்திருந்தால் இதுபோல் சும்மா இருப்பரா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, ஏராளமானோர் மிஷ்ராவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்; சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.