/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'உங்களை கடத்த போகிறேன்': ஊபர் டிரைவரால் பெண் அதிர்ச்சி
/
'உங்களை கடத்த போகிறேன்': ஊபர் டிரைவரால் பெண் அதிர்ச்சி
'உங்களை கடத்த போகிறேன்': ஊபர் டிரைவரால் பெண் அதிர்ச்சி
'உங்களை கடத்த போகிறேன்': ஊபர் டிரைவரால் பெண் அதிர்ச்சி
UPDATED : டிச 18, 2024 03:46 AM
ADDED : டிச 18, 2024 12:50 AM

புதுடில்லி: ஹரியானாவில், ரயில் நிலையம் செல்வதற்காக ஊபர் டாக்சிக்கு முன்பதிவு செய்த பெண்ணுக்கு, 'உங்களை கடத்தப் போகிறேன்' என டாக்சி டிரைவர் குறுஞ்செய்தி அனுப்பியதால், அதிர்ச்சியடைந்த அப்பெண், டாக்சியை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
டில்லி புறநகர் பகுதி யான ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த பெண், அதிகாலை 4:00 மணிக்கு ஆன்லைன் டாக்சி முன்பதிவு செயலியான ஊபரில், காருக்கு பதிவு செய்தார். அவருக்கு கார் ஒதுக்கப்பட்டது.
அந்த டிரைவருக்கு செயலியில் உள்ள குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை பயன்படுத்தி, 'ஆனந்த் விஹார் ரயில் நிலையம் செல்ல வேண்டும், தயவு செய்து வரவும்' என, அப்பெண் தகவல் அனுப்பினார். அதன் பின், தன் உடைமைகளை எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே காத்திருந்தார். அப்போது ஊபர் செயலியில் இருந்து, பதில் குறுந்தகவல் வந்தது.
அதில், 'நீங்கள் ஆனந்த் விஹார் செல்ல வேண்டுமா, உங்களை கடத்திக் கொண்டு மகிழ்ச்சியாக செல்வேன்' என ஊபர் டிரைவர் பதில் அனுப்பிஇருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பயந்து வீட்டிற்குள் சென்று விட்டார். டாக்சியை ரத்து செய்த அவர், அதற்கு பின் டிரைவர் அனுப்பிய செய்தியை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, தனக்கு நேர்ந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
சிலர், ஆங்கில மொழிப்பெயர்ப்பில் ஏற்பட்ட பிழையால் இது நிகழ்ந்திருக்கலாம் என, கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் இந்த செயலை கண்டித்துள்ளனர்.