/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
உலகளவிலான கிளி மூக்கு, மயில் ரக சேவல் கண்காட்சி: பங்கேற்ற சேவல் வளர்ப்போர் நெகிழ்ச்சி
/
உலகளவிலான கிளி மூக்கு, மயில் ரக சேவல் கண்காட்சி: பங்கேற்ற சேவல் வளர்ப்போர் நெகிழ்ச்சி
உலகளவிலான கிளி மூக்கு, மயில் ரக சேவல் கண்காட்சி: பங்கேற்ற சேவல் வளர்ப்போர் நெகிழ்ச்சி
உலகளவிலான கிளி மூக்கு, மயில் ரக சேவல் கண்காட்சி: பங்கேற்ற சேவல் வளர்ப்போர் நெகிழ்ச்சி
ADDED : ஜன 05, 2026 01:52 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உலக அளவிலான கிளி மூக்கு, மயில் ரக சேவல் கண்காட்சி நடந்தது. இதில் சிறந்த சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் குட்டியப்பட்டி தனியார் தோட்டத்தில் தனியார் அமைப்புகள், சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில, உலக அளவிலான சேவல் கண்காட்சி நடந்தது. இதில் பல மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சேவல் வளர்ப்பாளர்கள் சேவல்களை காட்சிப் படுத்தினர். நுாலான், கீரி, மயில், காக்கா செவல், கருங்கீரி, செங்கீரி, பொன்ராம், வெள்ளை உள்பட 300க்கும் மேற்பட்ட நாட்டு ரக சேவல்கள் இடம் பெற்றன.
இதில் சேவல்களின் உயரம், அலகு, கொண்டைப்பூ, வால் அமைப்பு, இறகு, கூவல், பராமரிப்பு அடிப்படையில் சிறந்த சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு எல்.இ.டி., டி.வி., 2ம் பரிசாக பிரிட்ஜ், 3ம் பரிசாக வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், கேஸ் அடுப்பு என 100 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் நெல்சன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். கண்காட்சியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை ரங்கராஜின் கீரி ரக சேவல் ரூ.3 லட்சத்துக்கு விலை கேட்கப்பட்டது. ஆனால் சேவல் மீதுள்ள பாசத்தால் அவர் விற்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் நடத்தப்படும் சேவல் கண்காட்சியில் கலந்து கொள்வேன். 2025ல் எனது சேவலை ரூ.7 லட்சத்துக்கு கேட்டனர். இந்தாண்டு ரூ.3 லட்சத்துக்கு கேட்டனர். ஆனால், நான் கொடுக்கவில்லை. சேவல்களை எனது பிள்ளைகள் போல பராமரித்து வருகிறேன். அதனால் அதை எப்போதும் விலைக்கு கொடுக்கும் எண்ணம் இல்லை. மற்ற சேவல்களை பராமரிப்பது போல கிளி மூக்கு, கீரி சேவல்களை பராமரிக்கலாம்.
கம்பு, தினை, பயறு உள்ளிட்ட தானியங்கள் தீவனமாக வழங்குகிறேன். சளித்தொற்று தாக்காமல் இருக்க கை மருத்துவம் செய்கிறோம். இவை நன்கு உயரமாக வளரக்கூடியவை. வால் இறகு மட்டும் 4 அடி நீளத்துக்கு வளரும், எனவே சேவல்களை ஆரோக்கியமாக பராமரிக்க 10 அடிக்கு 10 அடி அறை அவசியம். நன்றாக பராமரித்தால் 5 முதல் 6 ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இன விருத்திக்காக இதே ரக பெட்டைகளுடன் ஜோடி சேர்க்கிறோம். குஞ்சுகளை விற்பனை செய்கிறேன்.
நாட்டு ரக சேவல் இனங்கள் அழிந்து வருகின்றன. அதை பாதுகாக்கும் வகையில் சேவல் பிரியர்கள், வளர்ப்பவர்களை கண்காட்சியில் ஒருங்கிணைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கவை என்றார்.

