/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சிவன்மலை கோவிலில் புடவை வைத்து வழிபாடு
/
சிவன்மலை கோவிலில் புடவை வைத்து வழிபாடு
ADDED : செப் 27, 2024 06:44 AM

திருப்பூர் : சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று புடவை வைத்து பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலிலுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், முருகப்பெருமான், பக்தர்கள் கனவில் தோன்றி குறிப்பால் உணர்த்தும் பொருட்களை வைத்து பூஜை செய்வது வழக்கமாக நடந்து வருகிறது.
கடந்த ஆக., 17 ம் தேதி பொருள் மாற்றப்பட்டு, இரண்டு இளநீர் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இச்சூழலில், திருவண்ணாமலை மாவட்டம், வீரணம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், 30 என்பவர் கனவில் உணர்த்திய புடவை வைத்து வழிபட நேற்று சுவாமியிடம் உத்தரவு பெற்றார். அவ்வகையில், நேற்று முதல் புடவை வைத்து பூஜை நடக்கிறது.
இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் கூறுகையில், 'சிவன்மலை உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். புடவை வைக்கப்பட்டுள்ளதால், சமுதாயத்தில் அதன் தாக்கம் போகப்போக தெரிய வரும்,' என்றார்.

