sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : செப் 20, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 20, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க.,வுக்கு தேவை சுயபரிசோதனை :எம்.முரளி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'மறைந்த பிரதமர் இந்திராவினாலேயே தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதற்காக தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி திருவாய் மலர்ந்திருக்கிறார். 'தி.மு.க.,வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது' என்றும் கூறுகிறார். அவர் எப்படி தி.மு.க.,வை இதுவரை காப்பாற்றினார் என்பதற்கு சில உதாரணங்கள்:

*'இந்திராவை சேலை கட்டிய ஹிட்லர்' என, கூட்டத்திற்கு கூட்டம் வர்ணித்த கருணாநிதி, சர்க்காரியா கமிஷனை எதிர்கொள்ள, கூட்டணிக்கு அவர் காலில் விழுந்து, 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக' என, முழுக்கமிட்டு தி.மு.க.,வைக் காப்பாற்றினார்.

*எம்.ஜி.ஆர்., மறைவு வரை, 'கூடா நட்பு' காங்கிரசின் ஆதரவில் தி.மு.க.,வைத் தன் பக்கம் வைத்துக் கொண்டார்.

*எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வை உடைத்து, அ.தி.மு.க., (ஜெ) என்றும் அ.தி.மு.க.,(ஜா) என்றும் நாமகரணம் சூட்டி மகிழ்ந்து காப்பாற்றிக் கொண்டார்.

*அதற்குப் பின் மூப்பனாருடன் கைகோர்த்து, ஆட்சியைப் பிடித்து, தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டார்.

*கூடாநட்பு காங்கிரசுடன் எக்காரணத்தைக் கொண்டும் அ.தி.மு.க., சேரவிடாமல், ஜெயலலிதா எப்போதோ சோனியாவை விமர்சித்துப் பேசியதை, இவரும், இவரது அடுத்த மட்ட தலைவர்களும், 'ரிபீட்' செய்து பேசி, காங்கிரசை தந்திரமாக, அ.தி.மு.க., கூட்டணியில் சேர விடாமல் தடுத்துத் தன் கட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்.தி.மு.க., தன் சொந்த பலத்தில் நின்று ஜெயித்ததாக வரலாறு கிடையாது. இப்போது தி.மு.க., தன் கடைசி கட்டத்தை எதிர் நோக்கியிருக்கிறது. தன் மகன்களே தனக்கு எதிராக செயல்படுவது, கழகக் கண்மணிகள் ஒவ்வொருவராக அந்தந்த மாவட்ட சிறைக்குச் செல்வது, கூடா நட்பு காங்கிரஸ் தன்னை விட்டு விலகி நிற்பது, சோனியா இவரைச் சட்டை செய்யாதது, பா.ம.க., மற்றும் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர்கள் மணிக்கொருதரம் கோபாலபுரம் செல்லும் நிலை மாறி, அவர் முகத்தைக் கூட பார்க்க துணியாதது என, பல சம்பவங்கள் நடந்துவருகின்றன.அரசியல் புயலில் தி.மு.க., நிலைத்து நிற்க, பெரிய அளவில் சுயபரிசோதனை தேவை.



'ஏழை கட்சி...' நல்ல ஜோக்!அ.சேகர், சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், சென்னையில் நடந்த தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 'தி.மு.க., ஏழை கட்சி' என , முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்; இது நல்ல ஜோக்!'ஏழைகளின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்' என, 1970களில், தி.மு.க., கூறியது, உண்மையே. ஆனால், ஏழைகளுக்குப் பதிலாக, தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் முதல், அடிமட்ட கட்சியின் தலைவர்கள் வரை, இன்று கோடீஸ்வரர்களாக வலம் வருகின்றனர்.அவர்கள் மட்டும் அல்லாமல், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், வீட்டு வேலைக்காரர்கள் வரை, தொழில் அதிபர்களாகவும், கல்வி வள்ளல்களாகவும் உருவாகிவிட்டனர். இன்று, சிறைக்குள் சென்றுள்ளவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் தான். அவர்கள் நினைத்தால், டில்லியில் கொடி கட்டி பறக்கும் ராம்ஜெத் மலானியை கனிமொழிக்காக வாதாட செய்ததை போல், தங்கள் வழக்குகளையும் எதிர்கொள்ள முடியும்.அதைத்தான் இன்று சிறையில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம், ராஜா, பொன்முடி மற்றும் நேருவும் விரும்புவர். அப்படி இருக்கையில், 'சென்ற தேர்தலில் தோற்று, ஏழையாக இருக்கும் கட்சி தி.மு.க., அதனால், வழக்கறிஞர்கள் ஊதியம் வாங்காமல் வழக்கை சந்தியுங்கள்' என சொல்லியுள்ளதை, தி.மு.க., வழக்கறிஞர்கள் பின்பற்றுவரா என்பது போக, போகத்தான் தெரியும்.முன்னாள் முதல்வர், எப்படி கனிமொழிக்காக, கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானிக்கு, பல லட்சங்களை ஊதியமாக கொடுத்து, வழக்கு நடத்தினாரோ, அப்படி, தி.மு.க., வழக்கறிஞர்களுக்கும், கட்சி யே ஊதியம் கொடுத்து, இந்த வழக்குகளை எடுத்து நடத்தச் சொன்னால், மிகுந்த மகிழ்ச்சியாக நடத்துவர்.



'மதுரையா...ஐயையோ...' : வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: தமிழக மாவட்டங்களில், மதுரையும், ராமநாதபுரமும் கலவரபூமியாக இருக்கும் இரண்டு மாவட்டங்கள். வைகை ஆறில் தண்ணீர் ஓடாவிட்டாலும், ரத்த ஆறு மட்டும் தாராளமாக ஓடும் பெருமை பெற்றது, இந்த இரண்டு மாவட்டங்கள். இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும், பண்பாட்டிலும், நாகரிகத்திலும் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள், இவை என்பது வேதனை தரும் விஷயம்!இப்பகுதி மக்கள் வாயால் பேசுவதை விட, அரிவாள், கத்தி, கம்பு, துப்பாக்கியால் பேசுவது தான் அதிகம். மோசமான ஜாதகம் உள்ளவர்கள் தான், இந்த மாவட்டங்களுக்கு கலெக்டராகவும், போலீஸ் அதிகாரிகளாகவும் வருவர்.'ஆன்மிகச் செம்மல்' முத்துராமலிங்கத்தேவர், விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பி, இந்து மதத்தின் சிறப்பை உலகறியச் செய்த, பாஸ்கர சேதுபதி, மருது சகோதரர்கள் வாழ்ந்த இந்தப் பகுதி, இப்போது ரத்த பூமியாகிவிட்டது, கொடுமையிலும் கொடுமை. ஜாதி வெறியே கூடாது என, முத்துராமலிங்கத்தேவரின் நினைவுநாளைக் கொண்டாடுவது, இன்று சிம்ம சொப்பனம் போல ஆகிவிட்டது. தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த இமானுவேலின் நினைவு நாளில், ரத்த அபிஷேகம் தான் தாராளமாக நடக்கிறது.அண்மையில், பரமக்குடியில் நடந்த கலவரத்தில், அநியாயமாக ஏழு பேர் இறந்து போனது, நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. வேதம்புதிது, கிழக்குச்சீமையிலே, பசும்பொன், விருமாண்டி போன்ற திரைப்படங்கள், இப்பகுதி மக்களின் மனநிலையை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றன. கமுதி,முதுகுளத்தூர் போன்ற ஊர்களின் பெயரைக் கேட்டாலே உள்ளம் நடுங்குகிறது.இனியாவது, வன்முறையைக் கைவிட்டு, அரிவாள் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, இப்பகுதி மக்கள் மனம் திருந்தவேண்டும்.



கவனிப்பாராஜெ.,:நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: 'ஆசிரியர் நியமனத்தில், அரசு அக்கறை காட்டவில்லை' என, கருணாநிதி கூறியிருக்கிறார். ஆறாவது ஊதியக்குழு அடிப்படையில், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தங்களுக்கும் கிடைக்கும் என, இடைநிலை ஆசிரியர்கள் ஏமாந்தது, இவருக்கு தெரிந்தே நடந்தது.இடைநிலை ஆசிரியர்களின் இயக்கங்கள், இன்றளவும் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை எண்ணி, கண்ணீர் வடிக்கின்றன. எதிர்காலத்திலும், இதே பாதிப்பு தொடர்ந்து விடுமே என கலங்குகின்றன. ஆடு நனைகிறதே என, ஓநாய் வருத்தப்படுவது போல, இப்போது கருணாநிதி கவலைப்படுகிறார். முதல்வர் பொறுப்பில் உள்ளவர்களே, நம்ப வைத்து கழுத்தை அறுத்தால், என்ன செய்ய முடியும். கருணாநிதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு அதைத்தானே செய்தார். மறக்க முடியுமா? எல்லா வகையிலும் தவறுகளுக்கு உடந்தையாக இருந்த, கடந்த ஆட்சி, தற்போது நியாயம் பேசுவது வேதனையாக உள்ளது.








      Dinamalar
      Follow us