PUBLISHED ON : நவ 20, 2025 12:00 AM

எஸ்.வேணுகோபாலன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உதயமான இடத்திலேயே அஸ்தமனமான ஓர் அரசியல் கட்சி எது என்று கேட்டால், அது கம்யூனிஸ்ட் கட்சி தான்!
'உலகத் தொழிலாளர்களே... ஒன்றுபடுங்கள்' என்பர்; ஆனால், தாங்கள் மட்டும் ஒன்பது கோணங்களாக பிரிந்து நிற்பர்.
அக்கட்சியின் பிதாமகர்களும், ரஷ்யா வில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைய காரணமா க இருந்தவரும், அந்நாட்டின் முதல் அதிபருமான லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலின் சிலைகளையே தகர்த்து தரைமட்டமாக்கிய வரலாறும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உண்டு.
'ஒன்றுபடுவோம்; போராடுவோம்!' என்ற கோஷத்தை தவிர, அக்கட்சிக்கென்று தனியாக பாடல் என்று எதுவும் கிடையாது.
ஆனால், பாரத தேசத்திற்கென்று, கொடியும், பாடலும் உண்டு.
அதுதான், பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய, 'வந்தே மாதரம்' என்ற பாடல்!
வானொலியிலும், அரசு தொலைக்காட்சியிலும், 'வந்தே மாதரம்' பாடலுடன் தான் நிகழ்ச்சிகளே துவங்குகின்றன.
ஆனால், சமீபத்தில், எர்ணாகுளத்திலிருந்து கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு, தெற்கு ரயில்வே சார்பில், புதிதாக வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்காக நடந்த விழாவில், ஆசிரியர்களுடன் சேர்ந்து வந்தே பாரத் ரயிலில் பயணித்த பள்ளி குழந்தைகள், வந்தே மாதரம் பாடலை பாடியபடி சென்றிருக்கின்றனர்.
அதைக் கண்டித்து, 'வந்தே மாதரம் என்பது ஆர்.எஸ்.எஸ்., பாடல்; இதை அரசு விழாவில் பாடுவதோ, அதற்கு குழந்தைகளை பயன்படுத்துவதோ அரசியலமைப்பு கொள்கைகளை மீறும் செயல்' என்று கூறி, இது தொடர்பான விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள அரசு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்நடவடிக்கையில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
ஏனெனில், இவர்கள் இந்நாட்டில் வாழ்ந்தாலும், அவர்களது பற்றும், பாசமும் சீனாவிடம் தான்!
இந்தியா - -சீனா போரின் போது, 'நம்மை அரவணைத்து பாதுகாக்க, சீனாவிலிருந்து செஞ்சட்டை வீரர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றனர்' என்று அறைகூவியவர்கள் தான் இந்த கம்யூனிஸ்ட்கள்.
இவர்களிடம் நாட்டுப்பற்றை எதிர்பார்க்க முடியுமா?
பள்ளிக் குழந்தைகள், 'வந்தே மாதரம்' பாடலை பாடியதற்கு விளக்கம் கேட்டு உத்தரவிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, அன்றாடம் காலையில் வானொலி மற்றும் தொலைக்காட்சியில், ஒலி, ஒளிபரப்பாகும் வந்தே மாதரம் பாடலுக்கு தடை விதிக்குமா?
அதற்கு தைரியம் உண்டா?
lll
புரிந்து கொள்வரா? வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல் லிலிருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: 'எல்லாரையும் முதல்வர் ஆக்குகிறோம்; ஏன் நாமே
முதல்வர் ஆக கூடாது' என்று எண்ணி, ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கினார்,
தேர்தல் வியூக வகுப்பாளர், பிரசாந்த் கிஷோர். தன் பேச்சுக்கு மக்களிடம்
எந்தளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை ஆழம் பார்க்க, 2024 பார்லிமென்ட்
தேர்தலில் நின்று பார்த்தார்.
டிபாசிட் இழந்து, செல் லாக் காசு ஆனார். ஆனா லும், ஆசை யாரை விட்டது?
பீஹார் சட்டசபை தேர்தலில் முயன்று பார்ப்போம் என்று, 243 தொகுதிகளுக்கும்
ஆட்களை களமிறக்கியவர், முன்யோசனையாக தான் மட்டும் வியூக வகுப்பாளராகவே
நின்று கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தில், மாநிலத்தில் தொழில்
வளர்ச்சியை ஏற்படுத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பேன் என்றும், பீஹாரிகளின்
தன்மானம் காப்பேன் என்றெல்லாம் சூளுரைத்தார்.
அவரது வியூகம் மட்டு மல்ல... அவரது கட்சியும் டிபாசிட் இழந்து போனது!
வெற்று கோஷம், வெற்றியை தராது என்பதை இப்போது உணர்ந்திருப்பார், பிரசாந்த் கிஷோர்!
பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூ ட்டணி மற்றும்
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் அமைந்த காங்., - கம்யூனிஸ்ட் கட்சிகளின்,
'மஹாகட்பந்தன்' கூட்டணி கட்சிகளின் ஆரவார பிரசாரத்துக்கு நடுவே, பிரசாந்த்
கிஷோரின் குரல் வாக்காளர் காதுகளில் ஏறவில்லை.
அதேபோன்று, இளமையான
தலைமை, அரசியல் குடும்ப பின்னணி, வலுவான உட்கட்சி அமைப்பு, என்று எல்லாம்
இருந்தும், இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியும், மஹாகட்பந்தன் கூட்டணி மண்ணை
கவ்வியது.
காரணம், லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ரப்ரி தேவி
ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஜாதிய ஆதிக்கமும், ஊழல் அராஜகங்களையும்
பீஹாரிகள் மறக்கவில்லை.
அதேநேரம், அடிக்கடி அணி மாறுபவர்,
ஞாபகமறதியாளர், முதியவர், பா.ஜ.,வின் கைப்பாவை என்றெல்லாம்
விமர்சிக்கப்பட்டாலும், மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்த ஒரே
காரணத்திற்காக, ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த முதல்வர் நிதிஷ்கு மாரை
அம்மாநில பெண்கள் கைவிடவில்லை. கடந்த தேர்தலை விட அதிகப்படியான ஓட்டுகளை
செலுத்தி, மீண்டும் முதல்வராகும் வாய்ப்பை அவருக்கு வழங்கி விட்டனர்.
பீஹார் தேர்தல் உணர்த்தும் நீதி...
வெறுப்பு அரசியலால் மக்களின் மனங்களை வென்று விட முடியாது;
ஆக்கப்பூர்வமான திட்டங்களும், அனுசரணையான ஆட்சியை கொடுத்தால் மட்டுமே
வெற்றி பெற முடியும்.
இதை, புரிந்து கொண்டு செயலாற்றுவரா தமிழக அரசியல்வாதிகள்!
lll
வேடம் களைகிறது! பி.கார்த்திக்குமார், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: சனாதன தர்மத்தை எதிர்ப்பதை காட்டிலும், டெங்கு, மலேரியா
கொசுவை ஒழிப்பது போல், அதை ஒழிக்க வேண்டும் என்று வீர முழக்கமிட்டவர், துணை
முதல்வர் உதயநிதி.
அவரது தந்தையும், திராவிட மாடல் முதல்வருமான
ஸ்டாலின், 'இது கொள்கைக்காக உருவான கட்சி; தி.மு.க.,வினர் கொள்கைவாதிகள்'
என்று அடிக்கடி கூறி வருகிறார்.
தி.மு.க.,வின் கொள்கை என்னவென்று
தமிழக மக்களுக்கு தெரியாதா என்ன... இருப்பினும், ஈ.வெ.ராமசாமியின் கடவுள்
மறுப்பு கொள்கையை, இடுப்பு வேட்டியாக இறுக பிடித்துக் கொண்டிருப் பவர்கள்
தி.மு.க.,வினர்.
இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும்,
தமிழகத்தின் நகராட்சித் துறை அமைச்சருமான நேரு, தன் பிறந்தநாளை முன்னிட்டு,
திருப்பதி வெங்கடாச்சல பெருமாள் கோவிலில், அன்னதானத்திற்காக, 44 லட்சம்
ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளாராம்!
நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல் துறைக்கு பணியாளர்களை தேர்வு செய்ததில், 888 கோடி ரூபாய்
ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றஞ்சுமத்தியதும், பாவம்... கடவுள்
மறுப்பு கொள்கைவாதி, கோவில் கொடையாளி ஆகிப் போனார்!
கடவுள் மறுப்பாளர்களுக்கு சிக்கல் வந்தால், கடவுளை தஞ்சம் அடைவது தான் அவர்களது பகுத்தறிவு கொள்கை போலும்!
இதையெல்லாம் பார்க்கும் போது, 'பக்தரை போலவே பகல் வேஷம் காட்டி, பாமர
மக்களை வலையினில் வீழ்த்தி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவர் இந்த
நாட்டிலே, தமிழ் நாட்டிலே' என்று தான் பாடத் தோன்றுகிறது!
lll

