sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

தைரியம் உண்டா திருமாவுக்கு?

/

தைரியம் உண்டா திருமாவுக்கு?

தைரியம் உண்டா திருமாவுக்கு?

தைரியம் உண்டா திருமாவுக்கு?

4


PUBLISHED ON : செப் 16, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 16, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.பூந்தமிழ், விக்கிரவாண்டியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 2021ல் தி.மு.க., கையில் எடுத்த ஆயுதத்தை, கடந்த சில நாட்களாக வேறு சில அரசியல் கட்சிகளும் கையில் எடுத்து, கம்பு சுத்த துவங்கியுள்ளன.

அது என்ன ஆயுதம்? மது ஒழிப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மது ஒழிப்பு மாநாட்டை, உளுந்துார்பேட்டையில் நடத்தவுள்ளனராம். மது ஒழிப்பு குறித்து, 40 ஆண்டுகளாக, திருமாவளவன் வலியுறுத்தி வருகிறாராம். இது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் இல்லையாம்.

மதுவிலக்கு கொள்கையுள்ள காந்தி பிறந்த நாளில், காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை வி.சி., செய்கிறதாம்.

'தமிழகத்தில் லட்சக்கணக்கான பெண்கள்விதவைகளாக உள்ளனர். அதற்கு காரணம்மது' என்று பேசி, மது ஒழிப்பு மாநாட்டுக்கு கூட்டம் சேர அறைகூவி இருக்கிறார் திருமாவளவன்.

'சும்மா இருங்கள்... 40 ஆண்டுகளாகமது ஒழிப்பு குறித்து வலியுறுத்தி வந்துள்ளவர், எப்படி மது ஆலைகளையும்நடத்தி, மதுக் கடைகளையும் திறந்து வைத்திருக்கும் கழகத்தோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்தார்?' என்று நீங்கள் கேட்டால்... மன்னிக்கவும்! கொள்கை வேறு; கூட்டணி வேறு!

தமிழகத்தில் லட்சக்கணக்கான பெண்கள்,விதவைகளாக உள்ளனராம். இந்த அஸ்திரத்தைக் கையில் எடுத்து தான், மேடம் கனிமொழி, 2021 தேர்தலின்போது, தன் அண்ணனுக்கு ஆட்சியை வாங்கிக் கொடுத்தார்.

கனிமொழி அன்று சொன்னது, நேற்று தான் திருமா காதை எட்டி இருக்கிறது போலிருக்கிறது.

அடுத்த தேர்தலுக்கு, இன்னும் இரண்டே இரண்டு ஆண்டுகள் தான் உள்ளன.அதே அஸ்திரத்தை, தான் கையில் எடுக்க முடியாது என்பதால், அண்ணன் ஸ்டாலின், தம்பி திருமாவிடம் திருப்பி விட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தேர்தல் நேரத்தில், 'தம்பி திருமாவின் வேண்டுகோளுக்கு, அடுத்த ஆட்சியில் முதல் கையெழுத்து' என்று அறிவிக்க முகாந்திரம் போடுகிறாரோ?

அல்லது... அல்லது... 'சீட்' பேரத்திற்காக,திருமா தம்பி மாநாடு நடத்துகிறாரோ?

ஏனெனில், மது ஒழிப்புக்காக கைக்காசுசெலவழித்து மாநாடெல்லாம் நடத்த வேண்டாமே! தன் கட்சி சகாக்களை, 'ஒரே ஒரு நாள் டாஸ்மாக் பக்கம் போகாதீங்க தம்பீ...' என உத்தரவிட்டு, அதன்படி செயல்படச் சொன்னால் போதுமே!

இதன் பெயர், 'எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்' என்பது!

'குடிக்காதவர்களை விடுதலை சிறுத்தைகளுக்கு பிடிக்காது' என்று குற்றம் சாட்டுகிறார் பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா. இவர் வாக்கைப் பொய்யாக்கினால், தம்பிகளின் கைக்காசும்மிச்சமாகும்; மாநாடு செலவும் படு மிச்சமாகும்.

இதைச் செய்ய, தைரியம் உண்டா திருமாவளவனுக்கு?

சாலை இடையூறுகளை அகற்ற வழி பிறக்கணும்!


ந.தேவதாஸ், சென்னையில்இருந்து எழுதுகிறார்: 'சென்னை குடியிருப்புபகுதிகளில், வீட்டு உரிமையாளரின் அனுமதி இன்றி, வாசலில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிரான என்னநடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு விரிவானஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, போக்குவரத்து போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை அண்ணாநகர்என்.பிளாக்கில் வசிக்கும், தனியார் நிறுவன அதிகாரி கிேஷார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். 'எங்கள் குடியிருப்பு பகுதியில் தெருவோர உணவுக்கடைகளை உரிமம் பெறாமல் நடத்துகின்றனர்.தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை அருகில் உள்ள தெருக்களில் நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

'கூடவே சட்ட விரோத செயல்களும் நடப்பதால்பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் ஏற்படுகிறது.எனவே உரிமம் பெறாமல்இயங்கும் கடைகளையும்,அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும்' என, மனுவில்குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் பெரும்பாலும் சொந்த வீட்டுக்காரர்களும் சரி, வாடகைக்குகுடியிருப்பவர்களும் சரி, கார் நிறுத்த இடமில்லை எனில், நாகரிகம் கருதி, காரை வீட்டு ஓரத்தில்நிறுத்திக் கொள்வதையே,வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தெருக்களில், இரு புறமும்கார்கள் அடைத்து நிற்பதால்,பாதசாரிகள் செல்லும் வழி,குறுகி விடுகிறது.

இன்னும் சிலர், அதிக நடமாட்டமில்லாத வேறு ஏதாவது ஒரு தெருவில், வாகனங்களை விட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை தட்டிக் கேட்க, அப்பாவி தெருவாசிகளுக்கு பயம்.

தற்போது, நீதிமன்றமேஇவ்விஷயத்தில் தலையிட்டிருப்பது, சற்று ஆறுதல் அளிக்கிறது.

இது போன்று அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும், உரிமம்பெறாமல் இயங்கும் கடைகளையும், உடனடியாக அகற்றி, போக்குவரத்து இடையூறு இல்லாமல், மக்கள் எளிதாக பயணிக்க, அரசு நிர்வாகம் வழி வகை செய்ய வேண்டுமென்பதே, சென்னை வாசிகளின் கோரிக்கை!

'நாவட க்கம்' முக்கியம் விஷ்ணு!


என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில், ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆன்மிகவாதி மகாவிஷ்ணு, தன்னிடம் கேள்வி கேட்ட பார்வையற்ற ஆசிரியரிடம், 'முன் ஜென்மத்தில் நீ செய்த பாவங்களின் காரணமாகத் தான், இந்தப் பிறவியில் இப்படி பிறந்திருக்கிறாய்' என்று ஆவேசமாக பேசியதை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

கேள்வி கேட்ட அந்த பார்வையற்ற ஆசிரியர்,மகாவிஷ்ணுவின் ஆக்ரோஷமான பதிலைக் கேட்டு எந்த அளவுக்குவேதனைப்பட்டிருப்பாரோ? ஒருவன் செய்யும் பாவங்களால் மட்டும் மறுபிறவியில் குறைகளோடு பிறப்பதில்லை. பெற்றோர் செய்த பாவங்களாலும், குழந்தைகள் ஊனமுற்றவர்களாக பிறப்பதுண்டு. மரபு ரீதியான குறைபாடுகள் போன்ற சில அறிவியல் காரணங்களும் அதற்கு உண்டு.

கை, கால்கள் திடகாத்திரமாக இருந்தால்மட்டுமே ஒருவன் பேரும் புகழும் அடைவதில்லை. அவனது திறமையாலும், விடாமுயற்சிகளாலும் தான், அழியாப் புகழும், பெருமையும் அடைகிறான் என்பதே நிதர்சனமான உண்மை.

காது கேளாத விஞ்ஞானிதாமஸ் ஆல்வா எடிசன், எத்தனையோ கண்டுபிடிப்புகளை நமக்கு கொடுத்திருக்கிறார்.சமீபத்தில், பாரிசில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமான பதக்கங்கள் பெற்று, இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

தற்போது, தான் பேசிய அடாவடி பேச்சுகளுக்காக சிறையில் மஹாவிஷ்ணு அடைக்கப்பட்டிருப்பதும், அவர் முற்பிறவியில் செய்த பாவங்கள் காரணமாக இருக்குமோ என்னவோ. திருக்குறளில் எத்தனையோஎடுத்துக்காட்டுகளை மகாவிஷ்ணு கூறினாலும்,'நாவடக்கம்' எவ்வளவு முக்கியமானது என்று திருவள்ளுவர் கூறியிருப்பதை மட்டும் மறந்து விட்டார்!






      Dinamalar
      Follow us