sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

-'டேப்'பை ஓடவிடலாமே?

/

-'டேப்'பை ஓடவிடலாமே?

-'டேப்'பை ஓடவிடலாமே?

-'டேப்'பை ஓடவிடலாமே?

4


PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-'டேப்'பை ஓடவிடலாமே?




வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் ஸ்டாலின், கோவையில் பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை, பா.ம.க., தலைவர் அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

'கடந்த, 2019ல், திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை, அன்று கண்டித்தார் ஸ்டாலின்; கோவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததற்கு, முதல்வராகிய ஸ்டாலின், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றும் அன்புமணி கூறி உள்ளார்.

அரசு, தனியார் விழாக்கள், பயிற்சி, கருத்தரங்கு உள்ளிட்டவற்றில், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை, கடந்த காலங்களில் ஆடியோவாக ஒலி பரப்பப்பட்டு வந்தன; கலந்து கொள்பவர்கள்எழுந்து நின்றால் மட்டும் போதும் என்ற நிலை இருந்தது.

கருணாநிதி ஆட்சியில், 'தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை, ஆடியோவாகஒலிபரப்பக் கூடாது; அனைவரும் பாட வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டது.

அனைவருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து மனப்பாடமாய் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு போடப்பட்ட உத்தரவு, தற்போது தி.மு.க.,வினரே திக்கித்திணறி பாடும் நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டது. பாடல் தெரியாததாலோ அல்லது பிழை நேர்ந்தால் மக்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனரே என்று கருதியதாலோ, முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில், அப்பாடல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டன.

இந்த சிக்கல்களை எல்லாம் களைய, மீண்டும் ஆடியோவாக தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் ஒலிபரப்ப வைக்கச் செய்யலாம்.

நடவடிக்கை எடுக்குமா அரசு?



வரலாற்றுக்கு திரை போட்டது ஏன்?


அ.சேகர், கடலுாரிலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் வெளியானஅமரன் திரைப்படத்தின்மாபெரும் வெற்றி, மகிழ்ச்சி அளிப்பதாகஉள்ளது. அதே நேரம், 'மேஜர் முகுந்தின் பயோபிக் அமரன்' என்று சொல்லப்பட்டாலும்,இந்த வீரமகனை பெற்றுஎடுத்த பெற்றோர் குறித்த விபரங்கள் படத்தில் மறைக்கப்பட்டு விட்டதாக, இப்போது ஊடகங்கள் மற்றும் வலைப்பதிவுகள் வாயிலாக அறிய முடிகிறது.

'முகுந்த், பிராமண குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் தான், அந்த விபரங்கள் மறைக்கப்பட்டன' எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த படத்தில் முகுந்தின் மனைவியான, இந்து ரெபேக்கா வர்கீஸ் ஒரு கிறிஸ்துவர் என்பதால், அவருக்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட்டதாகவும்,சினிமா வணிகத்துக்காகஅவருடன் முகுந்த் செய்த காதலை மட்டுமே அதிகமாககாட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், முகுந்த் உறவினர்கள் பலர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்ததும்,அவர்களை பார்த்து, 6 வயதிலேயே முகுந்துக்கும்ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற ஆசை இருந்ததாகவும், அவரது தந்தை வரதராஜன் ஒரு பேட்டியில்கூறியுள்ளார்.

முகுந்தின் அம்மா கீதா, தற்போது வரை முகுந்தின் வீர மரணத்தை மறக்க முடியாமல், கண்ணீர் விட்டு அழுது வருவதாக கூறப்படுகிறது. தற்போதும்ராணுவத்தில் பயிற்சி பெறுவோர், முகுந்தின் பெற்றோரிடம் ஆசிர்வாதம்வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.

முகுந்த் தன் அப்பாவை வீட்டில் எப்படி அழைப்பார் என்பதை கூட வரதராஜனிடம் கேட்டு பதிவு செய்யாமல், 'நைனா' என்றுஅழைப்பது போல வசனம்எழுதி, அதை சிவகார்த்திகேயன் பேசி உள்ளார்.

இதே முகுந்த், தமிழகத்தில் உள்ள வேறு ஜாதியில் பிறந்தவராக இருந்து, அதை திரைப்படத்தில் கூறவில்லை என்றால், விட்டு விடுவரா?இன்று, 20 சதவீத பிராமணர்கள் இந்திய ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் உள்ளனர்.

முகுந்தின் மனைவி கிறிஸ்துவர் என்பதால், அவர் சிலுவை டாலர் அணிந்து நடித்துள்ளதைஅடிக்கடி காட்டிஉள்ளனர். அதே நேரம், இந்த படத்தை தயாரித்த, ஒரு பிராமணரான கமல் ஹாசனுக்கு, பூணுால் அணிந்தபடி சிவகார்த்திகேயனை காட்டுவதற்கு என்ன பயம்?

மேலும், தன் பெற்றோருடன் சென்னையில் முகுந்த் வாழ்ந்த பிராமண கலாசாரம் வெளிப்படும் வீட்டை ஏன் படத்தில் காட்டவில்லை. பிராமணரின் வீரத்தை தமிழக மக்கள் அங்கீகாரம்செய்ய மாட்டார்கள் என்றஎண்ணமா?

எது எப்படியோ... இந்தபடத்தில் முகுந்தின் பெற்றோர் மற்றும் அவரதுசமூகம் சார்ந்த பின்னணிஎதற்காக மறைக்கப்பட்டது என்பதற்கு உரிய விளக்கம்தர வேண்டியது, இந்த படத்தை தயாரித்த, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உரிமையாளர் கமல் ஹாசனின் கடமை!



நிஜமாகவே கடும் போட்டி நிலவும்!


அ.ரவீந்திரன், குஞ்சன்விளை,கன்னியாகுமரி மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என, பலமான கூட்டணியை அமைத்த தி.மு.க., பல வசீகரமான வாக்குறுதிகளை தேடிப்பிடித்து, அறிவித்தது.

ஆயிரத்தில் பாதி அளவுக்கு, மலைப்பான வாக்குறுதிகள்... பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குதிரைக்கொம்பு போன்றவை. ஒன்றாகப் பார்ப்போம்...

 நீட் தேர்வு ரத்து வாக்குறுதி.

நீட் தேர்வுக்காக வாதாடிய தமிழச்சி நளினி சிதம்பரமே, 'நீட் தேர்வில் விலக்கு பெறுவது குறித்து பேசலாமே தவிர, நடைமுறைக்கு சாத்தியமல்ல' எனச் சொல்லி விட்டார்.

 மது ஒழிப்பு.

மதுவை ஒழிக்கவே அவதாரம் எடுத்துள்ளதாக,தி.மு.க.,வின் கருணாநிதி வாரிசுகள் காட்டமாக பேசி,போராட்டம் நடத்தினர்; ஆனால், மதுவால் பல உயிரிழப்புகள் நடந்த பின்னும், மதுவும் அழியவில்லை; விற்பனையும் குறையவில்லை.

 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள்.

இவர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டம் என்பது, நீண்டநாள் கோரிக்கை. அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமியால்தர முடியவில்லை; தி.மு.க.,விடியல் மூலம் மு.க.ஸ்டாலின் தருவார் என நம்பியவர்களுக்கு, ஆண்டுகள் கடந்தும் காரியம் நடக்கவில்லை.

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஆசிரியர்கள் போராட களமிறங்குவது, தி.மு.க.,வுக்கு நித்திய கண்டமாக மாறும்போல் தெரிகிறது.

இவையெல்லாம்சாம்பிள்கள்.

தற்போது, ஆசிரியர்கள் தலைவலி தந்து கொண்டு இருக்கும் வேளையில், கூட்டணி கட்சிகள், ஆட்சியில் பங்கு;அதிகாரப் பகிர்வு என கோரிக்கை வைக்கத் துவங்கிஉள்ளன. எதிர்க்கட்சியினரோ, தி.மு.க.,வை வேரடி மண்ணோடு அழிக்கவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டுஉள்ளனர்.

அடுத்த சட்டசபை தேர்தலில், கடுமையான போட்டி நிலவும் என்பதைமட்டும் இப்போதே கணிக்க முடிகிறது!








      Dinamalar
      Follow us