/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கெஜ்ரியின் 500 பேன்டுகளும், 400 சட்டைகளும்!
/
கெஜ்ரியின் 500 பேன்டுகளும், 400 சட்டைகளும்!
PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, டில்லி ராம்லீலா மைதானத்தில், 'இண்டியா' கூட்டணி கட்சியினர் மாபெரும் போராட்டத்தை நடத்தி, ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க, பா.ஜ., அரசுக்கு எதிராக மக்கள் ஓட்டளித்து, அவர்களை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை தொடர்ந்து, அமலாக்கத் துறை வெளியிடும் தகவல்கள் ஒவ்வொன்றும், ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் படத்தின் திகில் காட்சிகளை காட்டிலும் திகிலுாட்டுவதாக உள்ளது.
கெஜ்ரிவாலின் ஊழல் விவகாரம் இந்தியாவை தாண்டி, கடல் கடந்தும் மையம் கொண்டுள்ளது. ஹேமந்த் சோரனைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஊழலின் ஒட்டுமொத்த உருவம் யாரெனில், ஹேமந்த் சோரன் தான்.
இந்த 'இண்டியா' கூட்டணி கட்சிகளின்ராம்லீலா மைதான போராட்டத்தை அலசி ஆராயும் போது, அரசியலமைப்பு என்றால் என்னவென்றும், ஜனநாயகம் என்றால் என்னவென்றும் ஒரு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவோ, தடுக்கவோ இயலவில்லை.
வெளியுலகிற்கு தெரியாமல், மர்மமாக நடந்து கொண்டிருந்த, டில்லி மதுபான கொள்கையில் நடந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததே, அகில இந்திய காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கொடுத்த 'துப்பை' வைத்துக் கொண்டு, அமலாக்கத்துறை புலனாய்ந்ததில், முதன் முதலாக டில்லி ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
சிசோடியாவை கைது செய்த போதே, 'கெஜ்ரிவாலை கைது செய்யாமல், மத்திய அரசு, சிசோடியாவை கைது செய்து வேடிக்கை காட்டி கொண்டிருக்கிறது' என்று, பாயைப் போட்டு பிராண்டியதும் அதே அகில இந்திய காங்கிரஸ் கட்சிதான்.
இப்போது அந்த அரவிந்த் கெஜ்ரிவாலைகைது செய்ததும், ஜனநாயகம் அண்டு அரசியலமைப்பு என்ற இரண்டு வார்த்தைகளை கையில் எடுத்துக் கொண்டு, வேடிக்கை காட்ட துவங்கி இருப்பதும் அதே அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், அதனுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளும் தான்.
'உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்' என்றார் அவ்வையார்.
அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 500 பேன்டுகளும், 400 சட்டைகளும், 100 விதமான செருப்புகளும் உள்ளதாம். இரண்டு ஆண்டுகளில் தான் வசிக்கும் அரசு பங்களாவை, 54 கோடி ரூபாய் செலவிட்டு அலங்கரித்து இருக்கிறார். உள் அலங்காரத்திற்கு மட்டும் அரசு பணம், 11 கோடிகளை கொட்டி இருக்கிறார். இவர் சாதாரண வாழ்வு வாழ்கிறாராம்; ஏழைப் பங்காளனாம்!
சாதாரண வாழ்வுக்கே இவ்வளவு செலவென்றால், ஆடம்பர வாழ்வென்றால், அரசு கஜானாவில் இருந்து எவ்வளவு கோடிகளை கொட்டியிருப்பார்?
இந்த ஏழைப்பங்காளனுக்கு ஆதரவாகத்தான், காங்கிரசு,ம் இதர இண்டியா கூட்டணி அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி, வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றன.
இதுவரை நம் நாட்டை சுரண்டி கொள்ளையடித்து கொழுத்து கொண்டிருந்தவர்கள், மொத்தமாகவே கூறு போட்டு விற்க, கூட்டணி அமைத்து கொடி பிடித்து கோஷம் போட்டு அலைகின்றனர்; அந்த கூட்டணிக்கு 'இண்டியா' என்ற திருநாமம் வேறு.
கர்மம்டா சாமி!
ஸனாதன பெருமையை உணருங்கள்!
சுப்ர.அனந்தராமன்,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீமராவ் என்ற இயற்பெயர்
கொண்ட, சாமார் ஜாதி தலித் சிறுவன், தன் பிராம்மண ஜாதி ஆசிரியரின் அளவற்ற
அன்பு, அரவணைப்பு, ஆதரவுகள் இவற்றால் வளர்ந்து, மாபெரும் சட்ட மேதை ஆகி,
சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அமைச்சரவையில், பிரதமர் ஜவஹர்லால்
நேருவால் நியமிக்கப்பட்ட சட்டத்துறை அமைச்சர் ஆனார்.
அவர் தான்,
இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டத்தை இயற்றினார். தன் குரு என்று
வரித்துக் கொண்ட, பிராம்மண ஆசிரியரின் குடும்பப் பெயரான, அம்பேத்கர்
என்பதை, தன் பெயருடன் இணைத்துக் கொண்டார்.
குருவின் கோத்திரத்தை, சிஷ்யர்கள் தங்கள் கோத்திரமாகக் கொள்வது, நம் வேத அத்யயன பாடசாலை குரு குலங்களில், பாரம்பரிய மரபு.
இன்னோர் உதாரணம்...
பிரபல
சங்கீத வித்துவான், மதுரை சோமு என்று பிரசித்தமடைந்த சோமசுந்தரத்தின் குரு
நாதர், சித்துார் சுப்பிரமணியப் பிள்ளை. இவர், ஆந்திராவில் தமிழ் பேசும்
மக்கள் அதிகம் வசிக்கும்,சித்துார் ஜில்லாவில் பிறந்து வளர்ந்தவர்.
பிறப்பால்
நாயுடு, அதாவது கம்மவார் இனத்தைச் சேர்ந்தவர். இவர், தமிழகத்தின்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற சங்கீத விற்பன்னர், குரு நாயனாப்
பிள்ளையிடம், குருகுல வாசம் செய்து, சங்கீதம் கற்றுத் தேர்ச்சி பெற்று,
மிகச் சிறந்த பாடகர் எனப் பெயரும் புகழும் பெற்ற போதிலும், எல்லாப் புகழும்
தன் குருநாதரான நாயனா பிள்ளைக்கே என்று குரு பக்தியுடன் கூறி, தன்
பெயருடன், 'பிள்ளை' என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டார்.
தான், நாயுடு இனத்தவராக இருந்த போதிலும், குரு பக்தியின் அடையாளமாக இதைச் செய்தார்.
நம் ஸனாதன தர்ம வழி முறை, குரு பக்தி.
சாந்தோக்ய உபநிஷதத்தில், சத்திய காமன் என்பவரது வரலாறு இடம் பெறுகிறது.
தன்
தந்தை யார், தன் கோத்திரம் எது என்று தெரியாத, ஏழை வேலைக்காரப் பெண்,
ஜபாலாவின் மகன் சத்திய காமன் என்பவன், கவுதமர் என்ற ரிஷியின்குரு
குலத்துக்குச் சென்று, வேதம் படிக்க முயற்சி செய்ய, குரு கவுதமமகரிஷி,
இவனது தந்தை, கோத்திரம் பற்றி கேட்கிறார்.
இவன் உண்மைகளைச் சொல்லி விடுகிறான்.
கவுதமர்,
'நீ உண்மையே பேசினாய். எனவே நீ பிராம்மணன் தான். நான் என் கோத்திரத்தை,
உனக்கு அளிக்கிறேன். உன் தாயாரின் பெயர் ஜபாலா. உன் பெயர் சத்திய காமன்.
இனி உன் பெயர் சத்திய காம ஜாபாலன். உன் கோத்திரம் கவுதம கோத்திரம்' என்று
சொல்லி, குரு குல பாட சாலையில் சேர்த்துக் கொள்கிறார்.
அந்த சிறுவன் பிற்காலத்தில், சத்திய காம ஜாபால மஹரிஷி என்று மிகப் புகழ் பெறுவது, பாரதீய வரலாறு. இதுதான் ஸனாதன தர்மம்.
இந்த உண்மை வரலாறுகளை, நம் திராவிட மாடல் ஹிந்து சமய, ஸனாதன தர்ம எதிர்ப்பாளர்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.
சாந்தோக்ய
உபநிஷதத்தை, தமிழ் விளக்க உரையுடன் அனைவரும் படிக்கலாம். சென்னை
மயிலாப்பூர் ஸ்ரீ ராம கிருஷ்ண மடத்து நுால் விற்பனை நிலையத்தில்
கிடைக்கிறது.

