sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

தீர்மானங்கள் 'ஒர்க்கவுட்' ஆகாது!

/

தீர்மானங்கள் 'ஒர்க்கவுட்' ஆகாது!

தீர்மானங்கள் 'ஒர்க்கவுட்' ஆகாது!

தீர்மானங்கள் 'ஒர்க்கவுட்' ஆகாது!

2


PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டாஸ் மாக் மதுக்கடைகளை தமிழக அரசு படிப் படியாக மூட வேண்டும். அடுத்த கட்ட மாக குஜராத், பீஹாரை பின்பற்றி, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்'என ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்நிறைவேற்றி இருக்கின்றனர்.

அந்த தீர்மானத்தை பத்திரிகையில் படிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது; புல்லரிக்கிறது. இதுபோன்ற தீர்மானங்கள் எல்லாம் ஒர்க்கவுட் ஆகாது மிஸ்டர் வைகோ.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திரா விட மாடல் அரசு, இதுபோன்ற எத்தனையோ தீர்மானங்களை பார்த்திருக்கும்; கேட்டிருக்கும்.

உங்கள் கட்சியோடு கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள், அரசையோ அல்லது தொழிற்சாலையையோ எதிர்த்து வேலை நிறுத்தம் என்று அறிவித்து விட்டால், வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருக்க மாட்டார்கள்.

குறிப்பிட்ட நாளில், முன்னதாகவே தயாராகி, வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ஸ்பாட்டுக்கு செங்கொடியுடன் அணி வகுத்து சென்று, வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி, 'வேலைக்கு செல்லாதீர்கள், வேலைக்கு செல்லாதீர்கள்' என்று மன்றாடி கேட்டு கொள்வர். சில தருணங் களில், இவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் இடையே வாக்குவாதங்களும், கைகலப்புகளும் கூட நடைபெறும்.

ஒரு வேலை நிறுத்தம் 100 சதவீதம் வெற்றியடைய வேண்டுமென்றால் இது தான் நடைமுறை; இப்படித்தான் நடத்த வேண்டும். அதுபோல, ம.தி.மு.க.,வினருக்கும் தமிழகத்தில் உண்மையிலேயே டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற எண்ணம் உயிர்ப்புடன் இருந்தால், முதலில் ம.தி.மு.க., கட்சி தொண்டர்கள் யாரும், 'அந்த பாழாய் போன மதுவை அருந்த மாட்டோம்' என்று, உண்மையாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள சொல்லுங்கள்.

அடுத்து, ஒவ்வொரு டாஸ்மாக் மதுக்கடைகளின் அருகிலும், சில பல கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் கட்சி கொடியுடன் நின்றபடி, 'ஐயா உள்ளே போகாதீங்க... ஐயா குடிக்காதீங்க... ஐயா உங்க குடும்பத்தை காப்பாத்துங்க... குடி நோயாளி ஆகாதீங்க...' என்று கோஷமிட்டு, கோரிக்கை விடுத்து தடுத்தாட்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தமிழகத்தில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து கொண்டிருக்கும் மது பிரியர்களையும், குடி நோயாளிகளையும் திருத்தி நல்வழிப்படுத்த இது ஒன்று தான் வழி!

அதை விடுத்து, 'ஏசி' அறைக்குள் அமர்ந்து முந்திரி பக்கோடாவும், ஹை டீயும்குடித்து விட்டு நிறைவேற்றும் தீர்மானங்கள் எதுவும், 'ஒர்க்கவுட்' ஆகாது.



எதிர்கட் சிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகள்!


வெ. சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்ததேர்தலின் போது, பா.ஜ., ஆட்சியின் மீது பெரிய ஊழல் புகார்கள் ஏதும் கூறமுடியாத நிலையில், எதிர்கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் ஊழல், முறைகேடுகள் என்று பொய் பிரசாரத்தைக் கையில் எடுத்தது.

கட்சிகள் பெறும் நிதிகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்என்பதற்காக, வங்கிக் கணக்கில் வைக்கும்படியாக மத்திய அரசு கொண்டு வந்தது இந்த திட்டம். பின்னர், உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த நிதி அளவின் விபரங்களும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஆளும் கட்சி நிதி உதவி பெற மறைமுக அழுத்தம்கொடுத்திருக்கலாம், டெண்டர்களை உபயோகப் படுத்தியிருக்கலாம் போன்ற ஊகங்களுக்காக, சிறப்பு விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறி, உச்ச நீதி மன்றம், உச்ச நீதி மன்றத்தின் மேற்பார்வையில், சிறப்பு விசாரணை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இது போன்றே எதிர் கட்சிகள், ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல், எதிர்க்கட்சி தலைவர்களின் கைபேசிகள் ஒட்டுக்கேட்பு, என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். ஆனால், ராகுல் விசாரணைக்காக தன்னுடைய கைபேசியைக் கொடுக்க மறுத்து விட்டார்.சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் சமயத்தில்கூட, அரசியல் சாசனத்திற்கு, இட ஒதுக்கீடுகளுக்கு ஆபத்து என்றெல்லாம், பொய் பிரசாரங்கள் செய்யப்பட்டன.

ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. எனவே, தற்போது புதிதாக அமலாக்கத்துறை என்மீது ரெய்டு செய்யப்போகிறது என்று ஒரு 'புளுகு' மூட்டையை விழ்த்துவிட்டுள்ளார் ராகுல்.தவறு செய்தால், சட்ட விரோத, செயல்களில் ஈடுபட்டால் ரெய்டுகள் யாருக்கு வேண்டு மானாலும் வரலாம், மடியில் கனமில்லையென்றால் பயப்பட வேண்டாமே. சமீபத்திய பட்ஜெட்டில் பெரிதாக குறை சொல்ல ஒன்றுமில்லாததால், தமிழகத்தின்பெயர் சொல்லவில்லை, நாற்காலியைக்காப்பாற்றிக் கொள்ள போடப்பட்ட பட்ஜெட்என்றெல்லாம் கூறிவிட்டுப் போய்விட்டனர். கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் ஊழல் என்று தவறான, பொய் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்தனர். வந்த சில மாதங்களுக்குள்ளேயே வால்மீகி ஊழல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜினாமா, முதல்வரின் மனைவிக்கு மைசூரில் விலை உயர்ந்த பல வீட்டுமனைகள் ஒதுக்கீடு, முதல்வர், துணை முதல்வர்களுக்கிடையே முதல்வர் நாற்காலியைப் பிடிக்க போட்டா போட்டி, சண்டை போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.

மக்கள், எதிர்கட்சிகளின் கோமாளித்தனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் விரைவில் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, பொய், தவறான பிரசாரங்களைக் கைவிட்டு விட்டு, பார்லி.,யில் செயல்பாடுகளை முடக்காமல், பொறுப்புள்ள, மக்கள், தேச நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களாக செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.



நி தின் கட்கரி என்ன செய்தார்?


ஏ.ஸ்ரீவாஸ், சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மற்றொரு துறையான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், 'வாழ்வே மாயம் என்ற அடிப்படையில், வாழ்க்கைக்கு காப்பீடு செய்தால், அதற்கும் ஜி.எஸ்.டி.,வரி வசூலிப்பது நியாயமில்லை.

'எனவே, காப்பீடுதிட்டங்களுக்கு ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தார்; தங்கமான வார்த்தைகள் என்பதை மறுப்பதற்கில்லை.

அவரது கருத்தை நிர்மலா சீதாராமன் கேட்கிறாரா, இல்லையா என்பது தெரியாது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இதே கட்கரி துறையில் சுங்கச்சாடி வசூல் குறித்து நாடு முழுக்க பலரும் கரடியாக கத்துகின்றனரே...

அதாவது, 'காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவேண்டும், அடாவடி வசூலை நிறுத்த வேண்டும், குண்டும் குழியுமாய் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க வேண்டும், 60 கி.மீ., இடைவெளியில் தான் சுங்கச்சாவடிகள் அமைய வேண்டும், 'முணுக் முணுக்' என்றால், சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது' என எத்தனையோ கூக்குரல்கள் எழுந்தனவே.

அவற்றின் மீதெல்லாம்கட்கரி என்ன நடவடிக்கை எடுத்தார். மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும்முன், வாத்தியார் கொஞ்சம் தன்னையும் சீர்திருத்திக்கொள்ள வேண்டாமா?








      Dinamalar
      Follow us