sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

'வெல்கம்' மோடி!

/

'வெல்கம்' மோடி!

'வெல்கம்' மோடி!

'வெல்கம்' மோடி!

4

PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM

4

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது பா.ஜ., இதன் வாயிலாக மூன்றாவது தடவையாக மோடி பிரதமர் ஆகிறார்.

'பா.ஜ.,வின் பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்; பா.ஜ.,வின் சர்வாதிகார ஆட்சியைத் துாக்கி எறிவோம்' என்று தெனாவட்டாகப் பேசிய, 'இண்டியா' கூட்டணி தலைவர்களின் முகத்தில் மக்கள் கரி பூசி விட்டனர்.

இதுவரை காங்கிரஸ் அல்லாதவர்கள் தொடர்ந்து மூன்று முறை பிரதமர் பதவியை வகித்ததில்லை.

பா.ஜ.,வைச் சேர்ந்த வாஜ்பாய் கூட பிரதமர் ஆக பதவி வகித்தாலும், ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தியதாக வரலாறு இல்லை.

சந்திரசேகர், சில மாதங்களே பிரதமராக இருந்தார். தேவ கவுடா, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து பிரதமர் பதவியை இழந்தார். மோடி மட்டுமே இதுவரை தொடர்ந்து பத்தாண்டுகள் பிரதமராக இருந்திருக்கிறார்.

லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெறப் போகும் பா.ஜ., அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தமிழகத்தில், பா.ஜ., ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலே, அது மாபெரும் வெற்றி தான். தன்னை வசைபாடியவர்களுக்கு, வெற்றி மூலம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

'கோ பேக் மோடி' என்று சொன்னவர்கள் எல்லாம், 'வெல்கம் மோடி' என்று வாயார வாழ்த்தி வரவேற்கும்படி செய்துவிட்டார் மோடி.



விபத்துகளை தடுக்க இதை செய்யலாம்!

அ.குணசேகரன், வழக் கறிஞர், புவனகிரி-, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வட மாநிலத்தில், புனே வணிகர் அகர்வாலின், 17 வயது மகன், ஜெர்மனி தயாரிப்பு காரை அதிவேகமாக ஓட்டி, இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமாகி உள்ளார். அந்தச் சிறுவன் மது அருந்தி இருந்தது வேதனையை மேலும் கூட்டுகிறது.

செல்வச் செழிப்பில் வளரும் இன்றைய குழந்தைகளில் பலர், இப்படித் தான் ஒழுக்கம் இல்லாமல் வளர்ந்து வருகின்றனர்.

இந்த கொடிய விபத்தை ஏற்படுத்திய அந்த சிறுவனின் பெற்றோர், அந்தக் குற்றத்தில் இருந்து அவனைக் காப்பாற்ற, அடுத்தடுத்து செய்த செயல்கள் அனைத்தும், செல்வந்தர்களின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

முதலில், அந்த சிறுவன் காரை ஓட்டவில்லை என்று கூறி, அவர்கள் வீட்டு டிரைவரை வலுக்கட்டாயப்படுத்தி ஒப்புக் கொள்ள வைக்க முயற்சி செய்துள்ளனர். இதைச் செய்த அந்த சிறுவனின் தாத்தா இப்போது கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

அந்த சிறுவன் மது அருந்தவில்லை என்று போலிச் சான்றிதழ் கொடுத்த இரண்டு அரசு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

அந்த சிறுவனின் தாய், சிறுவனின் ரத்த மாதிரியில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான தடயம் இல்லை என்பதாக நிரூபிக்க, தன் ரத்த மாதிரியை கொடுத்து ஆய்வு செய்ய வைத்ததற்காக இப்போது சிறையில் உள்ளார்.

சட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் வளைத்து தப்பிக்க பார்த்த அந்த சிறுவன், சிறார் என்பதால் எளிதாக ஜாமினில் வெளிவந்து விட்டார்.

அதைக் கண்டித்து, வலைப்பதிவுகள் அதிகளவில் வந்ததால், அவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டு, அந்த சிறுவன் மீண்டும் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஏற்கனவே, இளம் சிறார்கள், பாலியல் குற்றங்களை செய்துவிட்டு சிறைக்கு செல்லாமல் தப்பித்து வருவதால் அவர்களின் வயதை, 15 ஆக குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த அவனது தந்தை, அந்த சிறுவனுடன் வந்த அவனது நண்பர்கள், அந்த சிறுவனுக்கு மது பானங்கள் விற்பனை செய்த மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் என, பலர் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மனை வணிக தொழில் அதிபரே தன் பண பலத்தாலும், செல்வாக்காலும் தன் சிறார் மகனைக் காப்பாற்ற குறுக்கு வழியில் சென்று சட்டத்தை வளைக்கும்போது, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் ஏன் முடியாது!

ஜூன் 1 முதல், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தினால், பெற்றோருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும், அந்த சிறுவனுக்கு, 25 வயது வரை ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசும், இதைப் பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்.

மேலும் மது குடிப்போர், அவரவர் வீடுகளுக்குச் சென்று மது அருந்திக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்து, மதுக் கூடங்களை மூடி, தனியார் மது விடுதிகளுக்கும் கட்டுப்பாடு விதித்தால், நம் மாநிலத்தில் விபத்துகளைத் தடுக்க முடியும்.



முருகனுக்கே வெளிச்சம்!

எஸ்.டி. ஸ்ரீநிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் ஆகஸ்ட் மாதம், ஹிந்து அறநிலையத் துறையால், அகில உலக முருகன் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்தியாவிலோ அல்லது பிற பகுதிகளிலோ, ஒரு தெய்வத்தின் பெயரால் ஒரு மாநாடு நடத்தப்பட்டதாக சரித்திரமே இல்லை.

ஒரு தெய்வத்தின் பெயரை முன்னிலைப்படுத்தி மாநாடு நடத்துவது கோமாளித்தனமாக உள்ளது. கேட்டால் முருகப்பெருமானை தமிழ்த்தெய்வம் என்பர்.

இப்போது இந்த மாநாட்டிற்கு என்ன அவசியம் வந்தது?

ஒன்றுமல்ல... உத்தர பிரதேசத்தில் இவர்களால் ஆரியன் என்றழைக்கப்படும் ராமபிரானுக்கு, நீண்ட போராட்டத்திற்கு பின் பிரமாண்ட கோவிலை காட்டி, உலகமே அதிசயிக்கும்படியாக விழா எடுத்ததால், இங்கு இப்படி ஒரு மாநாட்டை மக்களின் வரிப்பணத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போறாத குறைக்கு, இங்கு ஒருவர் வேல் எனத் துாக்கி அலைந்து, கட்சியை வளர்த்தார்; உத்தரகண்டில் கார்த்திக் சுவாமி என, முருகப் பெருமானைக் கொண்டாடத் துவங்கி விட்டனர்!

அதற்காக தான் இந்த வயிறு வீக்கம்!

முருகன் தமிழ் கடவுள்; முருகன் வேறு; சுப்பிரமணியர் வேறு; பழனியில் நம்மவர்கள் தான் பூஜை செய்தனர்; முருகருக்கு பூணுால் கிடையாது; முருகாற்றுப்படை, திருப்புகழ் ஆகியவற்றை திருடித்தான் வேதங்கள் எழுதப்பட்டன என்பது போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும்.

'பப்ளிசிட்டி'க்காக இன்னும் என்னென்னவெல்லாமோ நடக்கப் போகிறதோ... முருகனுக்கே வெளிச்சம்!

      Dinamalar
      Follow us